நயன்தாரா என்னுடைய டார்லிங் என்னுடைய செல்லம் என்று பிகில் திரைப்படத்தின் இயக்குனர் அட்லி திடீரென இணையதளத்தில் பொங்கியிருப்பது நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை நயன்தாரா தென்னிந்தியாவின் ஈடுஇணையற்ற கதாநாயகியாக திரையுலகில் கோலோச்சி வருகிறார் அவருக்கு வயது யேறயேற அவரின் அழகும் பொலிவும் கூடிக்கொண்டே போகிறது. எந்த நடிகைக்கும் இல்லாத அளவுக்கு ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே கொண்டுள்ள நயன்தாரா தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகையாகவலம் வருகிறார்.

இந்நிலையில் தயாரிப்பாளரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனை கடந்த சில ஆண்டுகளாக  காதலித்து வரும் அவர், இன்னும் சில மாதங்களில் அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்நிலையில் பிகில் பட இயக்குனர் அட்லி சர்ச்சையான ஒரு கருத்தை டூவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதாவது திகில் திரைப்படம் இன்று திரைக்கு வர உள்ள நிலையில் அப்படம் குறித்து ரசிகர்களின் கேள்விக்கு  # AskAtlee என்ற ஹோஸ்டேக்கில் அட்லி  சூடாகவும் சுவையாகவும் பதில்அளித்துவருகிறார்.

 

இந்நிலையில் நயன்தாராவின் கதாபாத்திரம்  குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள அட்லி,  இப்படத்தில் நயன்தாரா ஃபன்னாவும் உணர்ச்சிப் பூர்வமாகவும் ஈர்க்கக்கூடிய வகையிலும் நயன்தாரா கேரக்டர்  அமைந்துள்ளது,  எனக் கூறியதுடன் இப்படத்தின் தேவதையே அவர்தான் என்னுடைய டார்லிங் (செல்லம்) என வர்ணித்துள்ளார் இது நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.