Asianet News TamilAsianet News Tamil

அம்மன் வேஷம் போட்டு கொண்டு அசிங்கமாக பேசிய வனிதா..! கொந்தளித்த நடிகர் நகுல்..!

வனிதா விஜயகுமார், சமீபத்தில் 'பிக்பாஸ் ஜோடி' நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில், நடுவராக இருந்த நகுல் மற்றும் ரம்யா கிருஷ்ணனை மோசமான வார்த்தைகளால் திட்டியதாக நடுவர் நகுல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

biggboss vanitha using bad words in set actor nakul about BBjodi
Author
Chennai, First Published Aug 1, 2021, 10:46 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

வனிதா விஜயகுமார், சமீபத்தில் 'பிக்பாஸ் ஜோடி' நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில், நடுவராக இருந்த நகுல் மற்றும் ரம்யா கிருஷ்ணனை மோசமான வார்த்தைகளால் திட்டியதாக நடுவர் நகுல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா ஃபீல்டை விட்டே அவுட்டான வனிதாவை திரும்பவும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அவர் உள்ளே இருந்தபோது சர்ச்சையாக பேசி பல பிரச்சனைகளுக்கு வழி வகுத்தாலும், நேர்மையுடன் நடந்து கொண்டார் என்று சிலர் இவருக்கு ஆதரவு கொடுக்கவே, மீண்டும் வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே வந்து, வத்திக்குச்சியாக செயல் பட்டு பல பிரச்சனைகளை கிளப்பினார். ஒரு நிலையில் மீண்டும் ஓட்டுக்கள் குறைவானதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

மேலும் செய்திகள்: 48 வயதிலும் ஹீரோயின்களை ஏக்கப்பட வைத்த ரோஜா..! வெரைட்டி ட்ரெஸ்ஸில் பட்டையை கிளப்பும் போட்டோ ஷூட்..!
 

biggboss vanitha using bad words in set actor nakul about BBjodi

அவ்வப்போது பல பிரச்சனைகளில் அடுக்கடுக்காக சிக்கி வந்த இவரது சமையல் திறமையை உலகறிய செய்தது 'குக் வித் கோமாளி' சீசன் 1 . நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் டைட்டிலையும் கைப்பற்றினார். ஸ்மூத்தாக போய் கொண்டிருந்த வாழ்க்கையில், 3 ஆவது திருமணம் பூகம்பத்தை ஏற்படுத்தியது. பின்னர் ஒரு வழியாக மூன்றாவதாக திருமணம் செய்த பீட்டர் பாலையும் கழட்டி விட்டு விட்டு, வழக்கம் போல் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனத்தை திருப்பினார்.

மேலும் செய்திகள்: மெல்லிய புடவையில் மிரளவைத்த சாக்‌ஷி அகர்வால்... கவர்ச்சி பதுமையாய் கதகதப்பைக் கூட்டும் போட்டோஸ்...!
 

biggboss vanitha using bad words in set actor nakul about BBjodi

அந்த வகையில் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர்கள் கலந்து கொண்ட நடன நிகழ்ச்சியான பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் சுரேஷ் தாத்தாவுக்கு ஜோடியாக நடனமாடி வந்தார். அதில் இவர் காலி வேடம் போட்டு டான்ஸ் ஆடியபோது... இவரது நடனத்தை நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் விமர்சனம் செய்த போது, மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு பேசியதும் இவருக்கு கோபத்தை ஏற்படுத்த செட்டிலேயே நடுவர்களுடன் விவாதம் செய்தார். நிகழ்ச்சியை பார்க்கும் போதும்... வனிதா கொஞ்சம் ஓவராகவே பேசியது ரசிகர்களுக்கும் தெரிந்தது.

மேலும் செய்திகள்: வெள்ளை நிற கவுனில்... ஏஞ்சல் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் 'ராஜா ராணி 2' வில்லி அர்ச்சனா! ஸ்டன்னிங் போட்டோஸ்!
 

biggboss vanitha using bad words in set actor nakul about BBjodi

இந்த பிரச்சனையின் காரணமாக நிகழ்ச்சியை விட்டே விலகுவதாக அறிவித்து ஷாக் கொடுத்தார். தான் விலகுவதற்கு காரணம் ரம்யா கிருஷ்ணன் என்பதை மறைமுகமாக தெரிவித்திருந்தார் வனிதா. தற்போது இந்த நிகழ்ச்சி நிறைவடைந்து இரண்டு வாரங்கள் ஆகும் நிலையில் நடுவர்களின் ஒருவரான நகுல்... பேட்டி ஒன்றில் நாங்கள் தன்மையாக தான் எங்களின் கருத்துக்களை கூறினோம்... ஆனால் அவர் அம்மன் வேஷம் போட்டு கொண்டு தங்களை அசிங்கமான வார்த்தையால் பேசி திட்டியதாக செட்டில் இருந்தவர்கள் கூறினார்கள் என கொந்தளித்து பேசியுள்ளார். என்னை பேசினால் கூட பரவா இல்லை ரம்யா கிருஷ்ணன் எவ்வளவு பெரியவர் அவரை இப்படி பேசலாமா என ஆதங்கப்பட்டுள்ள  விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

  

Follow Us:
Download App:
  • android
  • ios