பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல்வேறு சுவாரஸ்யமான போட்டிகளுடன் நகர்ந்து கொண்டிருந்தாலும், கமல் ஒவ்வொரு போட்டியாளர்களை கண்டிக்க துவங்கியதில் இருந்து முடிந்த வரை சண்டை போடுவதை போட்டியாளர்கள் தவிர்த்து வருகிறார்கள். குறிப்பாக இரண்டாவது நாளே சுரேஷிடம் வரிந்து கட்டிய அனிதா, ஆளே இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டார்.

அதே போல் விதவிதமாக கொளுத்தி போட்டு, பலரது முகத்திரையை கிழித்து வந்த சுரேஷ் கூட, நாடா... காடா... டாஸ்க்குக்கு பிறகு அமைதி ஆகிவிட்டார். இவர்கள் மீண்டும் களத்தில் இறங்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பதாகவும் உள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், தங்க சுரங்கத்தில் அதிக தங்கங்களை சேகரிக்க வேண்டும் என்பது டாஸ்காக வைக்கப்படுகிறது. இதில் நான்கு குழுக்களாக பிரிந்து போட்டியாளர்கள் விளையாடுகிறார்கள். இதில் முதல் முறையாக சம்யுக்தா வாயை திறந்து சனத்தை திட்டுகிறார். 

பாலா கஷ்டப்பட்டு சேகரித்த தங்கத்தை, ஜித்தன் ரமேஷ் அவரிடம் இருந்து திருடுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. கொஞ்சம் அமைதியாகவே சென்று கொண்டிருந்த பிக்பாஸ் போட்டியில் இன்று, பல பிரச்சனைகள் மற்றும் சுவாரஸ்யமான விளையாட்டுகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.