விரைவில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தமிழில் துவங்க உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சி மீதான ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கும் வண்ணம் ப்ரோமோக்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போதும் ஒரு புதிய புரோமோ வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்: நடிகைகளை மிஞ்சும் அழகில்... சித்தி 2 சீரியல் நடிகை வெண்பா கொடுத்த விதவிதமான போஸ்! மாடர்ன் உடையில் வேற லெவல்!
 

தமிழில் பிக்பாஸ் சீசன் 3 கடந்த வருடம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஓவ்வொரு நாளும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் ரீல் லைப் பிரபலங்கள் ரியல் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை தெறித்து கொள்ளவே பலர் பிக்பாஸ்  நிகழ்ச்சியை விரும்பி பார்க்கிறார்கள்.  நார்மலாகவே அடுத்து வீட்டு பிரச்சனைகளை தெரிந்து கொள்வதில் ஆர்வம் எல்லா மனிதருக்கும் அதிகம் தானே. அதை தான் கொஞ்சம் மார்டனாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்புகிறார்கள்.  

தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி, செப்டம்பர் 6ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தெலுங்கில் ஆரம்பிச்சிட்டாங்களே தமிழில் இன்னும் எப்போ தொடங்கும் என தெரியவில்லையே என இங்குள்ள பிக்பாஸ் ரசிகர்கள் வாய்விட்டு வறுத்தப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், கமல் ஹாசனின் பிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்கான முதல் புரோமோ வீடியோ வெளியானது. ஆகஸ்ட் 27ம் தேதி வெளியான வீடியோவில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் தோன்றிய கமல் ஹாசன் பிக்பாஸ் 4 தொடங்க உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

மேலும் செய்திகள்: கேரள புடவையில் டாப் ஆங்கிள் போஸ்... சும்மா கும்முனு இருக்கும் ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!
 

தற்போது அதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த முறை ஷிவானி நாராயணன், ஷிவாங்கி, ரம்யா பாண்டியன், கிரண், அதுல்யா, சூர்யா தேவி, சனம் ஷெட்டி, டிக்டாக் இலக்கியா, வித்யுலேகா ராமன், குக்வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் பங்கேற்பதாக கூறப்படுகிறது.  அதுமட்டுமின்றி ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஹீரோயினாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின. மேலும் கலக்கப் போவது யாரு, அது இது எது புகழ் காமெடி நடிகர்  அமுதவாணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது. 

மேலும் செய்திகள்: உண்மையிலேயே தேம்பி தேம்பி அழுத விஜய்..! 9 வருடத்திற்கு பின் நடிகை வெளியிட்ட தகவல்!
 

இந்நிலையில் நிகழ்ச்சி எப்போது தொடங்க ஒரு மாதமே உள்ள நிலையில்,  இதில் கலந்து கொள்பவர்கள் லிஸ்ட் பற்றி யூகித்து சொல்லுங்கள், மேட்ச் ஆகுதான்னு பார்ப்போம் என்பது போல் ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் கமலின் ரியாக்ஷன் அல்டிமேட்.