பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், மக்களின் பேராதரவோடு அதிக ஓட்டுகளை பெற்று டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டவர், மலேசிய பாப் பாடகர் முகேன்.

ஆரம்பத்தில் இருந்து நடுநிலையாக விளையாடி வந்த இவர், பெரிதாக எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் வெற்றி பெற்றார். இவரை இந்த போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய அபிராமி துரத்தி துரத்தி காதலித்த போதிலும், வெளியில் இருக்கும் தன்னுடைய காதலி ஸ்பார்க்கிலுக்கு உண்மையாக இருந்தது இவரை வெற்றியாளராக மாற்றியது எனலாம்.

ஆனால், இவருடைய காதலி ஸ்பார்க்கிளை (நதியா)வை யாரும் பார்த்தது இல்லை. மேலும் இவரை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வமும் அனைவருக்கும் உண்டு. இந்நிலையில் முதல் முறையாக நடித்தியாவின் புகைப்படம் என ஒரு போட்டோ வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் முகேனுடன் அந்த பெண் நிற்கிறார். அந்த புகைப்படம் இதோ...