Varisu : வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா, ஷியாம், சரத்குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் வாரிசு படத்தில் தற்போது பிக்பாஸ் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார்.
வம்சி இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் வாரிசு. தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக புஷ்பா பட நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதுதவிர பிரபு, சரத்குமார், சம்யுக்தா, ஷியாம், குஷ்பு, எஸ்.ஜே.சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது.
வாரிசு படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு நடிகர் விஜய், ராஷ்மிகா நடிக்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட விஜய்யும், ராஷ்மிகாவும் சிகப்பு நிற உடையில் கட்டிப்பிடித்தபடி இருப்பது போல் புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆனது.
இதையும் படியுங்கள்... விக்ரமை காண திருச்சியில் கூடிய ரசிகர்கள்..! போலீசார் லத்தியால் அடித்து துரத்தியதால் பரபரப்பு..! வைரல் வீடியோ..

வாரிசு படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார் விஜய். வாரிசு படத்தை வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், வாரிசு படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். அதன்படி கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்திய நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தான் தற்போது வாரிசு படத்தில் இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் மேக் அப் போடும் போது எடுத்த வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்கள்... விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் இல்லை... திடீரென பின்வாங்கிய ‘பிசாசு 2’ - காரணம் என்ன?
