விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் இல்லை... திடீரென பின்வாங்கிய ‘பிசாசு 2’ - காரணம் என்ன?
Pisasu 2 : மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, பூர்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் பிசாசு 2 திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வெற்றி கண்டவர் மிஷ்கின். அவர் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ரிலீசாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற படம் பிசாசு. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இப்படத்தையும் மிஷ்கின் தான் இயக்கி உள்ளார்.
இதில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இவருடன் நடிகர் விஜய் சேதுபதி, சந்தோஷ் பிரதாப், நடிகை பூர்ணா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இதையும் படியுங்கள்... நடிப்பில் மட்டுமல்ல படிப்பிலும் பர்ஸ்ட் கிளாஸ் தான்... அதிதி ஷங்கரின் 10-ம் வகுப்பு மார்க் எவ்வளவு தெரியுமா?
அதன்படி பிசாசு 2 படத்தை வருகிற ஆகஸ்ட் 31ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. ஆனால் படத்தின் ரிலீசுக்கு இன்னும் 1 வாரம் மட்டுமே உள்ள நிலையில், படத்துக்கான புரமோஷன் பணிகளை படக்குழு இதுவரை தொடங்கவில்லை. இதனால் இப்படம் தள்ளிப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
பிசாசு 2 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதற்கு விக்ரமின் கோப்ரா படம் தான் காரணம் என கூறப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீசாகும் இப்படத்திற்கு அதிகளவிலான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதால், பிசாசு 2 படத்துக்கு போதிய அளவிலான திரையரங்குகள் கிடைக்கவில்லையாம். இதன் காரணமாகவே இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை வருகிற செப்டம்பர் மாதம் 9 அல்லது 10-ந் தேதி வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம்.
இதையும் படியுங்கள்... "இது எங்கள் பிரச்சனை "சிறை தண்டனை குறித்து தடாலடி அறிக்கை விட்ட லிங்குசாமி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.