பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், 105 நாட்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த ஆரி மக்களின் பேராதரவை பெற்று டைட்டில் வின்னர் என்கிற பட்டத்தை கைப்பற்றி, கடந்த வாரம் வெளியேறிய நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்: அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடம்..! நடிகர் சோனு சூட் தொடுத்த மனு மீது நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறும் போட்டியாளர்கள் லிஸ்டில் இருந்த, சுரேஷ் தாத்தா, சனம் ஷெட்டி, அனிதா ஆகியோர் இடம் பிடிக்க வாய்ப்பிருப்பதாக கருதப்பட்ட போதிலும், அவர்கள் மக்களிடம் குறைவான ஓட்டுகளை பெற்றதால் வெளியேறும் நிலை உருவானது. ஆனால் 50 நாட்களை தாண்டியும் நிலையில்லாமல் விளையாடி வந்த ஆரி, சோம், கேப்ரில்லா ஆகியோர் இறுதி சுற்று வரை வந்தனர்.

70 நாட்களுக்கு பின் சூடுபிடிக்க துவங்கியது ஆரியின் விளையாட்டு, போட்டியாளர்கள் கூட்டம் குறைய குறைய பாலாஜி மாற்று ஆரி மீது ரசிகர்கள் கவனமும் திரும்பியது. பலர் ஆரியை டார்கெட் செய்து விளையாடிய போதிலும், அதனை சகித்து கொண்டு பொறுமையாக இவர் விளையாடியதே இவருக்கு வெற்றி வாய்ப்பை தேடி தந்தது.

மேலும் செய்திகள்: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் களமிறங்கும் புதிய நடிகை..! யார் தெரியுமா? இனி சண்டை கன்ஃபாம் ..!
 

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஆரி, தற்போது வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் தனக்கு உடல் நலமில்லை என்று கூறியுள்ளதால் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவில் ஆரி கூறியிருப்பதாவது, உங்கள் எல்லோரையும் சந்தித்து நன்றி தெரிவிக்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றேன் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் முதலே எனது உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. விரைவில் உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறுவேன். பிக்பாஸ் டைட்டில் பட்டம் வென்றது என்னுடைய வெற்றி அல்ல, உங்களுடைய வெற்றி. நேர்மைக்கும் உண்மைக்கும் நீங்கள் கொடுத்த வெற்றி. இதற்காக நான் என்றைக்கும் உங்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டவன்.

மேலும் செய்திகள்: முதல் படம் வெளியாகும் முன்பே அடித்தது ஜாக்பாட்... சூர்யாவுடன் ஜோடி போட தயாராகும் சிவகார்த்திகேயன் பட நடிகை...
 

வெகு விரைவில் உங்களை எல்லாம் சமூக வலைதளம் மூலம் சந்திக்கின்றேன். அண்ணன், தம்பி, மற்றும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக என்னை தேர்வு செய்து அன்புடன் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார். இதற்க்கு பலர் ஆரி விரைவில் உடல் நலம் தேறி வரவேண்டும் என தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வீடியோ இதோ...