'சூரரைப்போற்று' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியாகி, கடந்த 3 வருடங்களாக வெற்றி படம் கொடுக்க காத்திருந்த சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்து பல்வேறு பாராட்டுகளை பெற்று தந்தது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடி போடவுள்ள நாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் களமிறங்கும் புதிய நடிகை..! யார் தெரியுமா? இனி சண்டை கன்ஃபாம் ..!
 

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்து வரும், 'டாக்டர்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ள பிரியங்கா அருள் மோகன் தான், சூர்யாவின் 40 ஆவது படமான இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க உள்ளார். ஏற்கனவே சூர்யாவின் சகோதரர் கார்த்தியை வைத்து 'கடைக்குட்டி சிங்கம்' என மாபெரும் வெற்றி படத்தை தந்த இயக்குனர் பாண்டிராஜ், இப்போது அவரது அண்ணன் சூர்யாவை வைத்து மீண்டும் ஒரு ஜனரஞ்சகமான குடும்ப படத்தை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்: சிவகார்த்திகேயனால் நிஜமான ஏழை மாணவியின் மருத்துவ கனவு..! நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய சஹானா!
 

மேலும் இந்த படத்தின் கதைக்கு பிரியங்கா அருள் மோகன் மோகன் கச்சிதமாக பொருந்துவார் என முடிவு செய்து அவரை கமிட் செய்து விட்டதாகவும், இந்த படத்தின் டைட்டில் மற்றும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்:படுக்கை அறையில் படுமோசமான கவர்ச்சி! மூச்சு முட்ட வைத்த 'சின்னத்தம்பி' சீரியல் நடிகை பவானி ரெட்டி!
 

சூர்யா ஏற்கனவே, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 'பசங்க 2 ' படத்தில் நடித்திருந்தார். எனவே இவர்கள் கூட்டணி தற்போது இணைவது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்திலேயே சிவகார்த்திகேயனுடன் இணைந்த, பிரியங்கா அருள் மோகன், சூர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ளது இவருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.