பிக்பாஸ் முதல் சீசன் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே துவங்கினாலும், பின் ரசிகர்களின் ஆதரவோடு, மிகப்பெரிய வெற்றிய பெற்ற நிகழ்ச்சியாக மாறியது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு நிறைய ஆதரவு கிடைத்தது.

இன்று துவங்க உள்ள நிகழ்ச்சியில் யார் ஓவியா அளவிற்கு, ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார் என்பது பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

மேலும், இன்று பிக்பாஸ் போட்டியில், ஓவியா உள்ளே செல்வது போல் ஒரு ப்ரோமோவும் வெளியாகியுள்ளது.  

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஆளாக உள்ளே நுழைந்திருப்பவர். 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் மிகவும் செக்ஸியாக நடித்த  நடிகை யாசிகா ஆனந்த் தான். 

இவரை நடிகர் கமலஹாசன் அறிமுகப்படுத்திய போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்களில், மிகவும் வயது குறைவான போட்டியாளர் இவர் தான் என கூறினார். பின் யாசிகா தனக்கு 18 வயது தான் ஆகிறது என்பதையும் ரசிகர்கர்களிடம் கூறினார்.