Varun and Akshara Video: திருமண கோலத்தில் இருக்கும் பிக்பாஸ் வருண், அக்ஷ்ரா ஜோடியின் வீடியோ ஓன்று இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது.ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து ஒவ்வொரு சீசனுமே எப்போதுமே, டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பெற தவறுதில்லை. 

பிக் பாஸ் 5ம் சீசன்:

முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசனில்ராஜூ ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர். 

வருண் மற்றும் அக்ஷரா ஜோடி:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் போது அவ்வளவு பிரபலம் இல்லாமல் இருந்த போட்டியாளர்களுக்கு தற்போது ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அப்படி ஏராளமான ரசிகர்களை கொண்ட போட்டியாளர்கள் தான் பிக் பாஸ் 5ம் சீசனில் கலந்து கொண்ட வருண் மற்றும் அக்ஷரா. பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போது வருண்-அக்ஷ்ரா நட்பு, ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்றாக இருந்தது. 

வீடியோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...

சிலர், வருண்-அக்ஷ்ரா நெருக்கத்தை பார்த்து இருவரும் காதலிக்கிறார்களா என கேள்வி எழுப்பினார்கள். ஆனால், அவர்கள் அதை பற்றி வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பும் ஜோடியாக இருவரும் அடிக்கடி வெளியே சந்திப்பதை, புகைப்படங்களாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுகின்றனர்.

வருண்-அக்ஷ்ரா விளம்பரம்:

View post on Instagram


இந்நிலையில் தற்போது, வருண்-அக்ஷ்ரா சேர்ந்து பிரபல மாத இதழுக்கான விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளதாக தெரிகிறது. இதனால், இருவரும் சேர்ந்து திருமண கோலத்தில் போட்டோஷூட் நடத்தி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த போட்டோஷூட் வீடியோ மற்றும் புகைப்படம் பார்த்த நெட்டிசன்கள் இருவரின் ஜோடிப்பொருத்தம் நன்றாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க ....Thamarai Selvi: நம்ம பிக்பாஸ் தாமரையா இது..? மாடர்ன் உடை அணிந்து ஐக்கியுடன் அசத்தல் டான்ஸ்..வைரல் வீடியோ...

View post on Instagram