Bigg Boss ultimate : இன்று பந்தை எதிர் தரப்பினரின் கூடையில் வீசவேண்டும் எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கிற்காக ஹவுஸ்மேட்ஸ் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு கொடூரமாக விளையாடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் :
14 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக்பாஸ் அல்டிமேட் தற்போது 6 ஹவுஸ்மேட்ஸ் உடன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் சீசனில் இருந்து 5 வது சீசன் வரை கலந்து கொண்டு வெற்றியடையாத ஹவுஸ்மேட்ஸ் இதில் கலந்து கொண்டனர். தாடி பாலாஜி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஜுலி, பாலாஜி முருகதாஸ், ஸ்ருதி, அபிராமி, அபிஷேக், அபிநவ், நிரூப், தாமரை என அறியப்பட்ட நபர்கள் உள் நுழைந்தனர்.
வைல்ட் கார்ட் என்ட்ரி :
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் சேர்ப்பதற்காக வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட சுரேஷ் சக்ரவர்த்தி, கேபிஒய் சதீஸ், விஜய் டிவி புகழ் தீனா, சண்டி மற்றும் ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பிரமுகர்கள் பாதியில் வந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...Grammy Awards :கிராமி விருதுகள் நிகழ்ச்சியில் மகனுடன் மாஸாக என்ட்ரி கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்- வைரலாகும் போட்டோ
தானே வெளியில் சென்ற போட்டியாளர்கள் :
கமல் விலகியதை அடுத்து வனிதா திடீரென தானாகவே வெளியில் சென்றுவிட்டார். பின்னர் உடல் நிலை கோளாறு ஏற்பட்ட காரணத்தால் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியில் சென்றுவிட்டார்.
15 லட்சத்துடன் வெளியேறிய போட்டியாளர் :
முந்தைய சீசன்கள் போலவே பணத்தை எடுத்துக்கொண்டு விருப்பம் உள்ள போட்டியாளர் வெளியில் செல்லாம் என்னும் விதியின்படி இந்த முறை பலபரீட்சை போட்டி நடத்தப்பட்டது இதில் ஸ்ருதி வெற்றி பெற்று 15 லட்சத்துடன் பணத்துடன் வெளியேறிவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு...Aishwarya Rajinikanth: மறைமுகமாக சேதி சொல்லும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...மகன் மடியில் அமர்ந்து கியூட் போஸ்..

சிம்புவின் 25 லட்ச ஆஃபர் :
பின்னர் 25 லட்சத்துடன் மேடையில் தோன்றிய சிம்பு போட்டியாளர்களிடம் மீண்டும் பணப்பெட்டியை காட்டி அந்த பெட்டியில் ரூ.25 லட்சம் பணம் இருப்பதாக கூறுகிறார்.அதோடு அந்த பணம் வேண்டும் என்பவர்களுக்கு பல்வேறு டாஸ்க்குகள் கொடுக்கப்படும் என்றும், அதில் வெற்றி பெறுபவர்களுக்கு அந்த ரூ.25 லட்சமும் கிடைக்கும் என கூறுயுள்ளார்.
இன்றைய டாஸ்க் :
இந்நிலையில் இன்று பந்தை எதிர் தரப்பினரின் கூடையில் வீசவேண்டும் எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கிற்காக ஹவுஸ்மேட்ஸ் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு கொடூரமாக விளையாடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
