பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நேற்று வேல்முருகன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து வைல்ட் கார்டு மூலமாக அனைவரும் காத்திருந்தது போலவே பாடகி சுசித்ரா களம் இறங்கினார். அர்ச்சனா போலவே சுசித்ராவும் வீட்டிற்குள் போன முதல் நாளே எல்லா போட்டியாளர்களுக்கும் இமோஜி கொடுத்து ஆட்டத்தை ஆரம்பித்தார். எப்படி அர்ச்சனா வீட்டிற்குள் வந்ததும் பாலாஜியை கடுப்பேற்றினாரோ? அதேபாணியில் சுசித்ரா, நீங்க மறுபடியும் தீயா விளையாடணும் என சுரேஷ்க்கும், கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும் என்பது போன்ற எமோஜியை அர்ச்சனாவுக்கும் கொடுத்தார். 

 

இதையும் படிங்க: சன் டி.வி.யின் பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம் முடிஞ்சாச்சு... வைரலாகும் போட்டோஸ்...!

இந்நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது பிக்பாஸ் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் போட்டியாளர்களை தேர்வு செய்யும் படி ஹவுஸ்மேட்ஸ் இடம் தெரிவித்துள்ளார். எதிர்பார்த்ததைப் போலவே ஆரி அர்ச்சனாவையும், அர்ச்சனா ஆரியையும் தேர்வு செய்தனர். அதன் பின்னர் அடுத்தடுத்து வந்த ஹவுஸ்மேட்ஸில் பாதி பேர் ஆரியையும், பாதி பேர் அர்ச்சனாவையும் தேர்வு செய்துள்ளனர். 

 

இதையும் படிங்க: நம்ம கண்ணம்மாவா இது?... டைட் டி-ஷர்ட்டில் வெளியிட்ட தாறுமாறு போட்டோஸ்...!

கடந்த வாரம் முழுவதும் இருவருக்கும் முட்டிக்கொண்ட நிலையில், இருவரையும் சக போட்டியாளர்கள் நாமினேட் செய்துள்ளனர். புரோமோவின் இறுதியில் அர்ச்சனா சிரித்த முகத்துடன் கையெடுத்து அனைவரையும் பார்த்து வணங்குவது போன்ற காட்சி காண்பிக்கப்படுகிறது.