உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியைக் காண ரசிகர்கள் அனைவரும் மரண வெயிட்டிங். இதுவரை விஜய் தொலைக்காட்சி வெளியிட்ட 2 புரோமோக்களும் தாறுமாறு வைரலாகின. கடந்த 3 சீசன்களை விட கொரோனா நெருக்கடி இருப்பதால் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். அதேபோல் நிகழ்ச்சியிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

அதாவது கடந்த 3 சீசன்களில் 16 போட்டியாளர்கள் 100 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டிற்குள் தங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. அதாவது  இந்த முறை, 12 போட்டியாளர்களுடன் 80 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் போட்டியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

அனு மோகன், ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆஜீத் காலிக், ரம்யா பாண்டியன், விஜே அர்ச்சனா, ஷிவானி நாராயணன், கேப்ரியலா சார்ல்டன், சனம் ஷெட்டி ஆகிய 6 சென்னையில் உள்ள 5 ஸ்டார் ஓட்டல் ஒன்றில் குவாரன்டைனில் உள்ளார்களாம்.  இப்படி தினம் தினம் பிக்பாஸ் பற்றிய தகவல்கள் கசிந்து வந்த நிலையில், அக்டோபர் 4ம் தேதி முதல் நிகழ்ச்சி  தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

 

இதையும் படிங்க: தோள்களை விட்டு நழுவும் ட்ரான்ஸ்பிரண்ட் உடையில்... கவர்ச்சி நங்கூரமிட்ட யாஷிகா..! மெர்சலான இளசுகள்..!

இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸின் குரலில் ஆடியோவாக வெளியாகியுள்ள அந்த புரோமோவில், “இது பிக் பாஸ். இந்த பிக் பாஸ் சீசன் 4ன் போட்டியாளர்கள் யார் என தெரிந்துகொள்ள நேரம் வந்தாச்சு. வரும் அக்டோபர் 4ம் தேதி மாலை 6 மணிக்கு பிக் பாஸ் சீசன் 4ன் கிராண்ட் ஓப்பனிங் நடக்க உள்ளது” என பேசியுள்ளார். இந்த ஆடியோ புரோமோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புரோமோ...