பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் வெளியாகி வருகிறது. கடந்த வாரம் முழுவதும் சோசியல் மீடியாவில் பாலாஜி முருகதாஸுக்கு கடும் எதிர்ப்பாலைகள் கிளம்பியது. பிக்பாஸ் வீட்டிற்குள் ஓவராக ஆட்டம் போடும் பாலாஜியை ஆண்டவர் ஸ்ட்ராங்காக கண்டிக்கவில்லை என கண்டனங்கள் எழுந்தது. ஆனால் காலை முதலே புரோமோ வீடியோவில் பாலாஜியை வறுத்தெடுத்து வருகிறார் கமல் ஹாசன். 

இந்த வாரத்திற்கான மோசமான போட்டியாக தேர்ந்தெடுத்துக் சொல்லும்படி கமல் சொல்ல, ஜித்தன் ரமேஷ் பாலாஜியின் பெயரை சொல்கிறார். அதனை அனைவரும் ஆமோதிக்கின்றனர். காரணம் அவர் தான் இந்த வாரம் வழங்கப்பட்ட ‘பாட்டி சொல்லை தட்டாதே’ டாஸ்கில் மிக மோசமாக செயல்பட்டு மொத்த டாஸ்க்கையும் கெடுத்து விட்டார். அதனால் அவர் தான் இந்த வாரத்திற்கான போரிங்கான போட்டியாளர் என அனைவரும் தெரிவித்தார்கள். ஆனால் பாலாஜி முருகதாஸ் அதற்கு மறுப்பு தெரிவித்து பேசியிருந்தார்.

 

இதையும் படிங்க: உடலில் ஆடையின்றி... கடற்கரையில் பிக்பாஸ் ஜூலி செய்த காரியம்... வைரல் போட்டோ...!

அடுத்த புரோமோ வீடியோவில், “ஹானஸ்ட் ஆக ஒன்றைக் கேட்கிறேன்.. ஹானஸ்ட் என்ன, ஹானஸ்டி என்றால் என்ன?” என கமல் கேட்கிறார். அதற்குப் பின் பாலாஜி ஷிவானி ஆகியோர் முகம் வாடி விட்டது காட்டப்பட்டிருந்தது. அதன் பின் நடந்தது பற்றி கேப்ரியல்லா விவரித்தார். "பாலா திருடியதை நான் என் கண்களால் பார்த்து விட்டேன். அதை நான் கேட்டேன். அது பற்றி அவர் சொல்லி முடித்துவிட்டார். வெளியில் சென்று மீண்டும் உள்ளே வந்தார். அதன்பின் ஹானஸ்ட் என பேச தொடங்கினார்.

 

இதையும் படிங்க: கழுத்தில் மாலையுடன் மணப்பெண் நயன்தாரா... மாப்பிள்ளை விக்னேஷ் சிவனை வலைவீசி தேடும் ரசிகர்கள்... வைரல் போட்டோஸ்!

வெளியில் என்ன நடந்தது என எனக்கு தெரியாது சார் என கேப்ரில்லா சொல்ல, கமல் ஹாசனோ எனக்கு தெரியுமே... என கள்ளத்தனமாக சிரிக்கிறார். உடனே சக போட்டியாளர்கள் அனைவரும் எங்களுக்கும் சொல்லுங்க சார் என கெஞ்சிய படி கேட்க ஆரம்பிப்பதோடு புரோமோ வீடியோ முடிகிறது. ஆக மொத்தம் இன்று பிக்பாஸ் வீட்டில் பலருக்கு இடையிலும் கமல் கொளுத்திப் போட போகிறார் என்பது மட்டும் தெரிகிறது.