பிக் பாஸ் வீட்டில் விபத்து; வலியால் துடித்த போட்டியாளர் - அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதி

Bigg Boss Tamil Season 8 : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் வலியால் துடித்த போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Bigg Boss Contestant Raanav Hospitalised after Injured in task gan

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இந்நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்‌ஷன் நடைபெற்றது. இதில் ஆனந்தி, சாச்சனா மற்றும் சத்யா, தர்ஷிகா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் 13 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். அவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி இந்த வாரம் நடைபெற்ற ஓபன் நாமினேஷனில் அனைத்து போட்டியாளர்களும் நாமினேட் ஆகி உள்ளனர். விஷால் கேப்டன் என்பதாலும், ஜெஃப்ரி நாமினேஷன் ஃப்ரீ பாஸ் வென்றதாலும் அவர்கள் இருவர் மட்டும் நாமினேட் ஆகவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார வார ஏதாவது ஒரு டாஸ்க் நடத்தப்படும். அந்த வகையில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களிடம் உள்ள கற்களை ஒருவர் உதவியுடன் காப்பாற்ற வேண்டும். அப்படி பவித்ராவும் ஜெஃப்ரியும் ஒரு அணியாக இணைந்து கற்களை காப்பாற்ற அவர்களிடம் இருக்கும் கல்லை ராணவ் எடுக்க முயலும் போது ஜெஃப்ரி ராணவ்வை தள்ளிவிட்டதில் ராணவ்வுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷிகா விஷாலுக்கு கொடுத்த காதல் பரிசு; என்ன தெரியுமா?

Bigg Boss Contestant Raanav Hospitalised after Injured in task gan

ராணவ் கையை பிடித்துக் கொண்டு வலியால் துடித்தபோது சுத்தி இருந்த போட்டியாளர்கள் அனைவரும் அவன் வலியால் துடிப்பது போல் நடிப்பதாக சொல்லி கிண்டலடிக்க, பின்னர் அருண் வந்து அவனை விசாரித்தபோது தான் உண்மையிலேயே ராணவ்வுக்கு கையில் அடிபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ராணவ்வை சக போட்டியாளர்கள் இணைந்து கன்பெஷன் ரூமுக்குள் அழைத்து செல்கின்றனர். அப்போது கூட செளந்தர்யா, ஜெஃப்ரி ஆகியோர் ராணவ்வுக்கு அடியெல்லாம் பட்டிருக்காது என பேசுகின்றனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து ராணவ் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டு இருப்பதாக பிக் பாஸ் அறிவித்ததை கேட்டு அனைவரும் ஷாக் ஆகின்றனர். இந்த புரோமோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. லேட்டஸ்ட் தகவலின் படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராணவ் நலமுடன் இருப்பதாகவும், அவர் மூன்று வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் இந்த போட்டியில் தொடர்வது சந்தேகம் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... வெயிட்டான சம்பளத்தோடு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சத்யா - தர்ஷிகா! எவ்வளவு தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios