பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதையொட்டி அந்த வீட்டில் இதுவரை நடந்த நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள் காட்டப்பட்டுள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் :
பிக்பாஸ் முதல் சீசனில் இருந்து 5 வது சீசன் வரை கலந்து கொண்டு வெற்றியடையாத 14 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக்பாஸ் அல்டிமேட் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. தாடி பாலாஜி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஜுலி, பாலாஜி முருகதாஸ், ஸ்ருதி, அபிராமி, அபிஷேக், அபிநவ், நிரூப், தாமரை என அறியப்பட்ட நபர்கள் ஆரம்பத்தில் உள் நுழைந்தனர்.
வைல்ட் கார்ட் என்ட்ரி :
டிஸ்னி ப்ளஸில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட சுரேஷ் சக்ரவர்த்தி இவருடன் கேபிஒய் சதீஸ், விஜய் டிவி புகழ் தீனா, சண்டி மற்றும் ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் வந்தனர். இவர்களில் ரம்யா பாண்டியன் மட்டுமே இறுதி சுற்றுக்கு சென்றுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...BiggBoss Ultimate : நள்ளிரவில் நடந்த எவிக்ஷன்... பைனல்ஸ் வாய்ப்பை தவறவிட்டு கண்ணீருடன் விடைபெற்ற பிரபலம்
தானே வெளியில் சென்ற போட்டியாளர்கள் :
கமல் விலகியதை அடுத்து ஒரு நாள் இரவு திடீரென எழுந்து அலறிய வனிதா..தன்னை வெளியேற்றுமாறு கதறினார். பின்னர் தானாகவே வெளியில் சென்றுவிட்டார். இவரை அடுத்து உடல் நிலை கோளாறு ஏற்பட்ட காரணத்தால் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியில் சென்றுவிட்டார்.
பணத்துடன் வெளியேறிய போட்டியாளர் :
முந்தைய சீசன்கள் போலவே இந்த முறையம் பிக்பாஸ் வீட்டுக்குள் பணப்பெட்டியை கொண்டுவந்தனர். முதலில் 3 லட்சமாக இருந்த தொகை பின்னர் 15 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதோடு வழக்கத்திற்கு மாறாக டாஸ்கில் வென்றவர்களுக்கே பணம் எனவும் கூறப்பட்டது. அதன்படி டாஸ்கில் சுருதி வெற்றி பெற்று 15 லட்சத்துடன் வெளியேறிவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு...Nayanthara: AK 62 படம் தந்த மவுஸு..சம்பளமாக கோடிகளை பல மடங்கு உயர்த்தி கேட்ட நயன்தாரா..!

நள்ளிரவில் எலிமினேஷன் :
நேற்று முன்தினம் அபிராமி வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்றும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு உள்ளார். இதையொட்டி நள்ளிரவில் கண்ணைக்கட்டி ஹவுஸ்மேட்ஸ் ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்களில் இருந்து ஜூலி மட்டுமே வெளியேற்றப்பட்டார்.
கண்களை குளமாக்கிய பிக்பாஸ் :
தற்போது நிரூப், பாலா, தாமரை, ரம்யா பாண்டியன் ஆகிய 4 போட்டியாளர்கள் இடையே டைட்டிலை தட்டி செல்வதற்கான கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இவர்களின் பிக்பாஸ் உணர்வுகள் குறித்த புகைப்படங்களும், காணொளியும் காண்பிக்கப்படுகிறது. இதைக்கண்டு ஹவுஸ்மேட்ஸ் கதறி அழும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
