MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • BiggBoss Ultimate : நள்ளிரவில் நடந்த எவிக்‌ஷன்... பைனல்ஸ் வாய்ப்பை தவறவிட்டு கண்ணீருடன் விடைபெற்ற பிரபலம்

BiggBoss Ultimate : நள்ளிரவில் நடந்த எவிக்‌ஷன்... பைனல்ஸ் வாய்ப்பை தவறவிட்டு கண்ணீருடன் விடைபெற்ற பிரபலம்

BiggBoss Ultimate : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதன் டைட்டிலை வெல்ல நிரூப், பாலா, தாமரை, ரம்யா பாண்டியன் ஆகிய 4 போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

1 Min read
Author : Ganesh A
Published : Apr 08 2022, 11:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஓடிடிக்கென பிரத்யேகமாக நடத்தப்பட்டு வருகிறது. சிம்பு தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. 70 நாட்கள் மட்டுமே நடத்தப்பட உள்ள இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இறுதிவாரத்தில் அபிராமி, ஜூலி, ரம்யா பாண்டியன், தாமரை, பாலா, நிரூப் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.

24

இதில் 3 பேர் மட்டுமே பைனல்ஸ் மேடையை எட்ட முடியும், அதனால் எஞ்சியுள்ளவர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் அபிராமி வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்றும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு உள்ளார். இதற்காக எஞ்சியுள்ள 5 போட்டியாளர்களும் கண்ணைக்கட்டி ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

34

இதிலிருந்து ஜூலி மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளார். மற்ற 4 போட்டியாளர்கள் எவிக்‌ஷனில் இருந்து தப்பித்தனர். பைனல்ஸ் வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஜூலி திடீரென வெளியேறியது அவரது ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. பைனல்ஸுக்கு செல்ல முடியாததால் கண்ணீருடன் விடைபெற்றார் ஜூலி.

44

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதன் டைட்டிலை வெல்ல நிரூப், பாலா, தாமரை, ரம்யா பாண்டியன் ஆகிய 4 போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் பாலா வெல்ல அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அது நடக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்...  Aneesh Menon : உதட்டைக் கடித்து பாலியல் தொல்லை கொடுத்தார்... பிரபல நடிகர் மீது இளம்பெண் பகீர் புகார்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Recommended image2
மகனுக்காக சொத்தை உதறிய செல்வநாயகி! தனிமையில் வாடும் சத்யா - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image3
தன்னைவிட 13 வயது மூத்த நடிகருடன் காதல்; நின்றுபோன ராஷ்மிகாவின் முதல் திருமணம் பற்றி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved