’பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்றவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டிருந்தாலும் என்னுடைய ஒரே டார்கெட் நீங்கதான் சார்’என்று கமலுக்கு மாபெரும் அதிர்ச்சி அளித்தார் நடிகை வனிதா.

ஏற்கனவே இல்லத்தை விட்டு ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு சிறப்பு விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் ‘சிறந்த துணிச்சல்காரிக்கான விருதை நடிகை வனிதாவுக்கு கமல் வழங்கினார். அதைப் பெற்றுக்கொண்டு பேசிய வனிதா, ‘நான் இங்க இருந்த எல்லாரையும் டார்கெட் பண்ணி கேம் விளையாடுனதா நினைக்கிறாங்க. ஆனா என்னோட ஒரே டார்கெட் நீங்கதான். இதுவரைக்கும் உங்களை நான் நேர்ல மீட் பண்ணுனதே இல்லை. அது இந்த பிக்பாஸ்லதான் சாத்தியமாச்சி. எனக்கு வின்னர் பட்டமெல்லாம் வேண்டாம். உங்க பக்கத்துல நின்னதே போதும்’என்று படுசாந்தமான முகம் காட்டினார்.

அடுத்து இன்று தனது 40 வது பிறந்தநாள் என்று அறிவித்த அவர்‘எனக்கு உங்க கூட ஒரு படத்துல ஒரு சின்ன கேரக்டர்லயாவது நடிக்கணும்’என்று வேண்டுகோள் வைக்க அதற்கு சம்மதம் தெரிவித்தார் கமல்.