ஆங்கில நாளிதழ் மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தி 2019ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட டி.வி. பிரபலங்களில் டாப் 20 ஆண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ரசிகர்களிடம் அவர்களுக்கு உள்ள வரவேற்பு மற்றும் பிரபலம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு டாப் 10 பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக வெளியான டாப் 20 பெண்கள் பட்டியலைப் போலவே, இதிலும் பிக்பாஸ் பங்கேற்பாளர்களின் ஆதிக்கமே அதிகம். 

இதையும் படிங்க: 2019ம் ஆண்டிற்கான டாப் 10 தொலைக்காட்சி பிரபலங்கள்... முதலிடம் யாருன்னு தெரிஞ்சா?... ஆடிப்போயிடுவீங்க...ஆடி...!

இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது, வேறு யாருமல்ல நம்ம பிக்பாஸ் கவின். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே கவினுக்கான ரசிகர் பட்டாளம் விரிவடைய ஆரம்பித்தது. அதிலும் லாஸ்லியா, கவின் காதல் விவகாரம் சோசியல் மீடியாவில் தீயாய் பரவியது. டாப் 20 பெண்கள் பட்டியலில் லாஸ்லியா முதலிடம் பிடித்துள்ள நிலையில், ஆண்கள் பட்டியலில் கவின் முதலிடம் பிடித்துள்ளது இரண்டு பேரின் ஆர்மியையும் செம்ம குஷியாக்கியுள்ளது. 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டைட்டில் வின்னரான முகேன் ராவிற்கு இரண்டாவது கிடைத்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த முகேன் ராவிற்கு ரசிகர்களை விட ரசிகைகள் பட்டாளமே அதிகமே. தனது க்யூட் ஸ்மைல் மற்றும் அழகால் மனம் கவர்ந்த முகேனுக்கு 2வது கிடைத்தது அவரது ரசிகைகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: ப்பா... என்னா கிளாமர்... இதுவரை யாரும் பார்த்திராத கவர்ச்சி அவதாரத்தில் அசின்...!

இந்த பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளதும் ஒரு பிக்பாஸ் பிரபலம் தான், அது வேறு யாருமல்ல பிக்பாஸ் வீட்டிற்குள் எங்கள் வீட்டு பிள்ளையாக வலம் வந்த தர்ஷன். பிக்பாஸ் டைட்டில் வின்னர் விவகாரத்தில் ஏமாற்றிய தர்ஷன், இந்த விஷயத்தில் ஆர்மியை சற்று சந்தோஷப்பட வைத்திருக்கிறார். மக்கள் மனதை மட்டுமல்லாது, உலக நாயகன் மனதையும் வென்ற தர்ஷன், அவரது தயாரிப்பு நிறுவனத்தில் 3 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: நடிகை முதல் மா நித்தியானந்த மாயி ஆக மாறியது வரை... ரஞ்சிதாவின் அசத்தல் புகைப்படங்கள்...!

இதையடுத்து 5வது இடத்தில் காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் கதிரவனும், 6வது இடத்தில் சின்னத்தம்பி சீரியல் பிரபலம் பிரஜினும், விஜய் டி.வி. தொகுப்பாளர் ரியோ ராஜ் 13வது இடத்தையும் பிடித்துள்ளனர்.