ஆண்டுதோறும் வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் சிறந்து விளங்குபவர்களை பட்டியலிட கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது. அந்த வகையில் தொலைக்காட்சியில் சிறந்து விளங்கும் பெண்கள் குறித்து, பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று வருடா, வருடம் கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது. அதில் ரசிகர்களிடம் அவருக்கு உள்ள வரவேற்பு மற்றும் பிரபலம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு டாப் 10 பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

அந்த பட்டியலில், இடம் பெற்றுள்ளவர்கள் எல்லாருமே நாள்தோறும் நாம் தொலைக்காட்சியில் பார்த்து பழக்கப்பட்ட முகங்கள் தான். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3-யில் கலந்து கொண்ட மூன்று பெண் போட்டியாளர்கள் இடம் பிடித்துள்ளனர.  ஆண்டுதோறும்  முதலிடத்தில் இருக்கும் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி இந்த வருடம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

இந்த பட்டியலில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இலங்கையை சேர்ந்த பெண் செய்திவாசிப்பாளர் லாஸ்லியா முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை செய்தி வாசிப்பாளராக இருந்து, தற்போது சீரியல்களில் நடித்து வரும் சரண்யாவும், 3வது இடத்தை விஜய் டி.வி. தொகுப்பாளினி திவ்யதர்ஷினியும், 4வது இடத்தை பிக்பாஸ் புகழ் சாக்‌ஷி அகர்வாலும், 7வது இடத்தை பிக்பாஸ் அபிராமியும் பிடித்துள்ளனர்.