நடிகர் விஜயக்குமாரின் மகளான வனிதா தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட சண்டை காரணமாகவும், ஏற்கனவே இரண்டு கணவன்களை விவாகரத்து செய்துவிட்டதாலும் தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வனிதாவிற்கு மூன்றாவது திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. சோசியல் மீடியாவில் திருமண பத்திரிகையும் வெளியாகி வைரலானது. ரசிகர்களின் சந்தேகத்திற்கு விளக்கமளித்த வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்தார். 

 

இதையும் படிங்க: ஆசன வாயில் லத்தியை சொருகி... சாத்தான்குளம் கொடூரத்திற்கு எதிராக கொந்தளித்த திரைப்பிரபலங்கள்...!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான வனிதா, அதன் பின்னர் குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று வெற்றி வாகை சூடினார். தற்போது யூ-டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். லாக்டவுன் காரணமாக வனிதாவின் யூ-டியூப் சேனல் சிக்கலில் மாட்ட, அந்த பிரச்சனையில் இருந்து அவருக்கு உதவ வந்த பீட்டர் பாலுடன் காதல் மலர்ந்தது. மகள்களின் சம்மதத்துடன் பீட்டர் பாலை காதலிப்பதை ஒப்புக்கொண்டார். 

 

இதையும் படிங்க: கிறிஸ்துவ முறைப்படி கொண்டாட்டமாக நடந்து முடிந்த வனிதா திருமணம்... வைரலாகும் போட்டோஸ்...!

கொரோனா லாக்டவுன் காரணமாக பீட்டர் பால் - வனிதாவின் திருமணம் வீட்டில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். வனிதாவின் பெற்றோரான விஜயகுமார் - மஞ்சுளாவிற்கு இன்று தான் திருமண நாள். அதனால் தான் இன்று வனிதா - பீட்டர் பாலை மணக்க முடிவெடுத்தார். வெள்ளை நிற திருமண உடையில் ஏஞ்சல் போல் காட்சியளிக்கும் வனிதாவை அவளுடைய மூத்த மகள் கரம் பிடித்து திருமணத்திற்கு அழைத்து வரும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது...