விஜய் டிவி, தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு, நிகழ்ச்சியின் மூலம் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி, தற்போது தொகுப்பாளினி, காமெடி நடிகை என அவதாரம் எடுத்து பலரையும் சிரிக்க வைத்து கொண்டிருப்பவர் அறந்தாங்கி நிஷா. தனது டைமிங் காமெடியால் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். 

நிஷா - ரியாஸ் தம்பதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சஃபா ரியாஸ் என பெயர் வைத்துள்ளனர். அறந்தாங்கி நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட குழந்தையின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை கர்ப்பமாக இருக்கும் போதிலிருந்தே அறந்தாங்கி நிஷா தொகுத்து வழங்கி வந்தார். அதன் பின்னர் குழந்தை பிறந்ததால் சிறிது காலம் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருந்த நிஷா, சமீபத்தில் கைக்குழந்தையுடன் குக் வித் கோமாளி செட்டிற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். 

இதையும் படிங்க: ஷ்ஷ்...யப்பா... ஒரு ட்வீட் போட்டது குத்தமாயா?... நடிகை குஷ்புவை டுவிட்டரில் ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்....!

கைக்குழந்தை மற்றும் கணவருடன் செட்டிற்குள் நுழைந்த அறந்தாங்கி நிஷாவை போட்டியாளர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு வரவேற்றனர். அனைவரும் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த போது, அந்நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள வனிதா, நிஷாவிற்கு சில அறிவுரைகளை வழங்கினார். 

இதையும் படிங்க: சென்னையில் இருந்து இதை எல்லாம் வாங்கிட்டு வாங்க... இல்ல வீட்டுக்கே வராதீங்க... சிங்கிற்கு தீபிகா போட்ட ஆர்டர்...!

குழந்தைக்கு லோஷன் அதிகம் போடாத... க்ரீம் போடு என்றும், அந்த க்ரீம் எங்கு கிடைக்கும் என்றும் நிஷாவிற்கு அறிவுரை கூறினார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் பிக்பாஸ் வீட்டில் வில்லி ரேஞ்சுக்கு சுற்றி திரிந்த வனிதாவா? இப்படி என வாய்பிளந்து நிற்கின்றனர்.