பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் வீட்டிற்குள் நுழையும் போதே பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் வந்தவர் வனிதா. வாயை கொடுத்து புண்ணாக்கி கொள்வதில் வல்லவரான வனிதாவை, சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்யாதவர்களே கிடையாது. படையப்பா நீலாம்பரி அளவிற்கு, 'வி ஆர் தா பாய்ஸ்' குரூப்பை தெறிச்சி ஓடவிட்டார். நீ வந்த மட்டும் போதும் என்பது போல், வனிதா வந்தாலே பிக்பாஸ் டீம் மீட்டிங் அதிரி புதிரியாக மாறும். 


வனிதா வந்தாலே அதிரடி என்பது போல், பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற சின்ன சின்ன விவாதங்களை கூட பூதாகரமான பிரச்னையாக மாற்றினார். பிக்பாஸ் வீட்டில் இப்படி வில்லத்தனம் பண்றாங்களே, இவங்க வெளிய வந்ததும் கண்டிப்பா பெரிய வில்லி நடிகையா தெறிக்கவிடுவாங்க என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால் படங்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடிக்க மறுத்த வனிதா விஜயகுமார், தற்போது ஒரு சீரியல் நடித்து வருகிறார். அதில் கூட பாசிட்டிவ் கேரக்டரில் தான் நடிக்கிறாங்களாம். 

சமீபத்தில் இலங்கை சென்றுள்ள வனிதா, அங்கு விதவிதமான செல்ஃபிகளை எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இலங்கை மக்கள் தன்னை வனிதா அக்கா என பாசத்துடன் அழைப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியால் லட்சக்கணக்கான மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டதாகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். தனது நியூ லுக் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ள வனிதா, #vanithastravels #vanithavijaykumarchannel, #newbeginnings ஆகிய ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் வனிதா புதிதாக யூ-டியூப் சேனல் ஒன்றை தொடங்கி இருக்கலாம் என தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே தீயாய் வேலை பார்த்த வனிதா அக்கா, யூ-டியூப் சேனல் ஆரம்பித்தால் எப்படியிருக்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

 

கவின், லாஸ்லியாகிட்ட இண்டர்வியூ வாங்கி போடுங்க அக்கா என வனிதாவின் டுவிட்டர் பக்கத்தில் கோரிக்கைகள் குவிந்து வருகிறது. மேலும் வனிதா இலங்கையில் சுற்றி வருவதால் கவின் அண்ணா பற்றி அப்டேட் சொல்லுங்க, லாஸ்லியா பற்றி அப்டேட் சொல்லுங்க என வனிதாவை ரசிகர்கள் மொய்த்தெடுக்க ஆரம்பித்துள்ளனர். எது எப்படியோ வனிதா மூலமா நமக்கு எல்லாம் ஒரு மாஸ் எண்டர்டெயின்மெண்ட் வெயிட்டிங்.