வனிதா - பீட்டர் பால் 3வது திருமணத்தை விமர்சிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யூ-டியூப்பில் சூர்யா தேவி என்ற பெண் வனிதா தனது யூ-டியூப் சேனல்களில் வெளியிடும் அனைத்து வீடியோக்களையும் ட்ரோல் செய்து வந்தார். அதுமட்டுமின்றி வனிதாவின் 3வது திருமணம் குறித்து தரக்குறைவாக விமர்சித்தார். இதனால் கடுப்பான வனிதா சில நாட்களுக்கு முன்பு போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தற்போது மீண்டும் சூர்யா தேவி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் மீது போலீசில் புகாரளித்துள்ளார்.

 

இதையும் படிங்க:  14 வயதிலேயே தன்னை அறியாமல் தாறுமாறாக உருவெடுக்கும் அனிகா... கேரள உடையில் நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வனிதா,  ரவீந்திரன் என்ற தயாரிப்பாளர் 2,3 படங்களை தயாரித்துள்ளார். அவர் என்ன எனக்கு மாமனா?. அவர் தயாரிப்பாளராக பிரபலமானதை விட யூ-டியூப்பில் பலரைப் பற்றி விமர்சித்து பேசி பிரபலமானது தான் அதிகம். அவர் தேவையில்லாமல் என்னுடைய சொந்த விஷயங்களில் தலையிட்டு வருகிறார். நான் அவரிடம் பேசியும் கூட, தொடர்ந்து என்னைப் பற்றி தவறாக பேட்டியளித்து வருகிறார். 

 

இதையும் படிங்க: “ஐ அம் இன் லவ்”... 3வது முறையாக காதல் வயப்பட்ட அமலா பால்... வைரலாகும் போட்டோஸ்...!

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கும் வேலை இல்லை, பப்ளிசிட்டிக்காகவும் பணம் சம்பதிப்பதற்காகவும் பிரபலமானவர்களை அசிங்கப்படுத்தி வருகிறார்கள். சூர்யா தேவியும், ரவீந்திரனும் சேர்ந்து தான் என் மீது அவதூறு பரப்பி வருகின்றனர். ரவீந்திரன் எல்லாம் ஒரு ஆம்பளையா?. அவன் யார் என் பெர்சனல் மேட்டரில் தலையிடுவதற்கு. தயாரிப்பாளர்கள் யூனியனில் இருந்து அவரை விலக்கி வைக்க வேண்டும். படம் எடுக்கவே விடக்கூடாது என பத்திரிக்கையாளர்கள் மத்தியிலேயே ஒருமையில் கொந்தளித்தார். லிப்ரா புரொடக்‌ஷன் சார்பில் சாந்தனு, அதுல்யா ரவி நடித்துள்ள “முருங்கைகாய் சிப்ஸ்” படத்தை ரவீந்தர் சந்திரசேகர் தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.