Asianet News Tamil

3வது திருமணத்திற்கு ஜூன் 27-யை தேர்ந்தெடுத்தது ஏன்?... லைவ் வீடியோவில் கண்ணீர் விட்டு கதறிய வனிதா....!

அதன் பிறகு பீட்டர் பாலுக்கு போன் செய்து ஜூன் 27ஆம் தேதி நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என அழுது கொண்டே கூறினேன்.

Big boss vanitha Revel Why Select June 27 For My 3rd Wedding Live Tearful video going viral
Author
Chennai, First Published Jun 20, 2020, 6:01 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் செய்தி பிக்பாஸ் வனிதாவின் 3வது திருமண விவகாரம் தான். பீட்டர் பால் என்பவரை ஜூன் 27ம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக வனிதாவே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதற்கு அவரது மகள்களும் வாழ்த்து செய்தி கூறிய மெசெஜ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நேற்று யூ-டியூப் நேரலையில் ரசிகர்களை சந்தித்த வனிதா, மூன்றாவது திருமணம் குறித்து விரிவான  தகவல்களை வெளியிட்டுள்ளார். 

பீட்டர் பால் ஒரு விஷுவல் எபெக்ட்ஸ் டைரக்டர் அவருடைய படம் ஒன்றில் நடிப்பது தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் அவரை நேரில் சந்தித்தேன். அந்த படத்தின் என்னை நெகட்டிவ் ரோலில் நடிக்கும் படி கேட்டிருந்தார். முதலில் மறுத்தாலும், பின்னர் நண்பர்களுடன் கலந்தாலோசித்து அந்த வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அந்த கதை சம்பந்தமாக இருவரும் அடிக்கடி மெசெஜ் செய்து  வந்தோம் அவ்வளவு தான். இடையில் எனது யூ-டியூப் சேனலுக்கான வேலைகளை பார்த்து வந்தேன். திடீரென கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. அதனால் வீடியோக்களை வெளியிட கேமராமேன், எடிட்டர் ஆகியோர் இல்லாமல் மிகவும் திணறினேன். 

அந்த சமயத்தில் பீட்டர் பால் எனது யூ-டியூப் சேனலை பார்த்துவிட்டு வாழ்த்து மெசெஜ் அனுப்பியிருந்தார். அப்போது நான் அவரிடம் நீங்க வேற சேனலையே இழுத்து மூட வேண்டிய நிலையில் இருக்கிறேன் என்று வருத்தமாக பதிலளித்தேன். எனக்கு டெக்னிக்கல் விஷயங்கள் எதுவும் தெரியாது என்பதை புரிந்து கொண்ட பால், அவரே உதவ முன்வந்தார். அந்த கொரோனா சமயத்திலும் தைரியமாக எனது வீட்டிற்கு வந்து உதவினார். என் மகள்களுடன் சேர்ந்து யூ-டியூப் வீடியோக்களை எடுக்க உதவினார். 

 

இதையும் படிங்க:  சுஷாந்த் தற்கொலையில் அதிரடி திருப்பம்: போலீசாரிடம் சிக்கிய 5 டைரிகள்...அச்சத்தின் உச்சத்தில் பாலிவுட் ஸ்டார்ஸ்...!

அதன் பின்னர் அவருடைய போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை பார்க்க கிளம்பிவிட்டார். அந்த சமயத்தில் நான் எடுத்த சில வீடியோக்கள் நன்றாக வரவில்லை. அதனால் தவிப்புடன் இருந்தேன். குழந்தைகளுடன் சேர்ந்து பழகியவர், 3 மாசமாக என்னுடன் இருந்து யூ-டியூப் வேலைகளை பார்த்தவர் இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. நான் போன் செய்து வந்துவிடுங்கள் என கேட்டேன். அவரும் உடனே வந்துவிட்டார். ஐந்தாவது முறையாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட போது அவர், எனக்கு புரொபோஸ் செய்தார். என் மகள்களுக்கு மிகவும் சந்தோஷம். அவர்கள் தான் என்னிடம் வந்து உங்களுக்கு இது ரொம்ப முக்கியம், நாங்கள் எல்லாம் திருமணம் செய்து கொண்டு சென்று விட்டால் உங்களை பற்றிய கவலையில் தான் இருப்போம். அதனால் உங்களுக்கு என்று ஒரு வாழ்க்கை தேவை. இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என ஜோவிகா கூறினார்.

 

இதையும் படிங்க:  8 வருஷத்துக்கு முன்னாடி அனிருத் இப்படி தான் இருந்தார்... வைரலாகும் பிரபல நடிகர் ஷேர் செய்த போட்டோ...!

என் பசங்க அம்மா கவலையோட இருக்காங்க என என்னை நினைத்து வாழக்கூடாது என நினைத்தேன். எனக்கென யாருமே இல்லை. எனது குடும்பத்தினரும் சேர்த்து கொள்ளவில்லை. வனிதாவை கஷ்டத்துடனே பார்ப்பது எனக்கே பிடிக்கவில்லை. அதனால் தான் பீட்டர் பால் கேட்ட போது எஸ் கூறிவிட்டேன். 40 வயது என்பது புதிய அத்தியாத்தின் தொடக்கம். அது மிகவும் வித்தியாசமாக இருக்கும். நமக்கு துணை தேவைப்படும். நான் ஸ்ட்ராங் என எல்லோரும் நினைக்கிறீர்கள். நான் சில விஷயங்களில் ஸ்ட்ராங் தான். ஆனால் எனக்கும் எமோஷன் இருக்கிறது. நான் எமோஷ்னலி வீக். ஏன் என் திருமணத்தை ஜூன் 27ம் தேதி தேர்ந்தெடுத்தேன் என்றால்?... இப்போது என்னுடன் இல்லாத என் அம்மாவிடம் தனியே அமர்ந்து பேச ஆரம்பித்தேன். நான் செய்வது சரி தான் என ஏதாவது சிக்னல் காட்டுங்கள் எனக் கேட்டுக்கொண்டேன். அப்போது திடீரென எனது போனில் ஜூன் 27ம் தேதி என் கண்முன்னே ஃபிளாஷ் ஆனது.

 

இதையும் படிங்க: “இனி இவருக்கு பதில் இவர்”.... சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலில் அதிரடி மாற்றம்...!

அதன் பிறகு பீட்டர் பாலுக்கு போன் செய்து ஜூன் 27ஆம் தேதி நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என அழுது கொண்டே கூறினேன். ஜூன் 27 தான் என்னுடைய அப்பா அம்மாவின் திருமண நாள். என் அம்மாவுக்கு இது ஸ்பெஷலான நாள். வீட்டில் எல்லோரும் கொண்டாடுவார்கள். அந்த தேதியில் நான் திருமணம் செய்து கொள்வதால் என் அப்பா அம்மாவின் ஆசி கிடைக்கும் என நினைக்கிறேன்" என வனிதா கண்ணீருடன் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios