பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற வனிதா விஜயகுமார், மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இதனிடையே பீட்டர் பால் முதல் மனைவியை முறையாக விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டது சர்ச்சைய உருவாக்கியது. 

 

இதையும் படிங்க: 14 வயதிலேயே தன்னை அறியாமல் தாறுமாறாக உருவெடுக்கும் அனிகா... கேரள உடையில் நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!

தானே முன்வந்து தனது யூ-டியூப் சேனல் மூலம் விளக்கமளித்த வனிதா, பீட்டர் பால் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், தனது பர்சனல் வாழ்க்கையைப் பற்றி தேவையில்லாமல் விமர்சித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி தன்னைப் பற்றி விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்வதற்காக வந்திருந்தார். 

இதையும் படிங்க: “ஐ அம் இன் லவ்”... 3வது முறையாக காதல் வயப்பட்ட அமலா பால்... வைரலாகும் போட்டோஸ்...!

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 3 குழந்தைகளுக்குத் தாயான நான், தனியாக இவ்வளவு காலங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அப்பா - அம்மா உறுதுணை இல்லை. அந்த ஒரே விஷயத்துக்காக யார் எல்லாமோ நடுவில் வந்து தவறாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது ரொம்பத் தவறான விஷயம். என் இரண்டு பெண் பிள்ளைகளையும் யார் பார்த்துக் கொள்வார்கள். இப்ப எனக்கு 40 வயசாகிறது. எனக்கு ஒரு துணை வேண்டும் என்பதால் திருமணம் செய்துகொண்டேன். நேர்மையாக செய்தேன். மற்றவர்களை போல் தப்ப எதுவும் செய்யவில்லை. இதற்காக என்னை தரக்குறைவாக விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறேன் என கண்ணீர் மல்க பேசினார்.