பிக்பாஸ் முதல் சீசனில் காதல் சர்ச்சையில் சிக்கியவர்கள் நடிகை ஓவியா மற்றும் ஆரவ். இவர்களுடைய காதல் பிக்பாஸ் வீட்டிலேயே மலர்ந்து அங்கேயே முறிந்து விட்டாலும், வெளியில் தற்போது நல்ல நண்பர்களாக தான் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் அடுத்த ஆரவ் என விமர்சிக்கப்பட்டு வருபவர் ஷாரிக். இவர் நடிகை  ஐஸ்வர்யா மீது அவ்வப்போது சிறு க்ரஷ் உள்ளதை உறுதி படுத்தி வருகிறார்.

இதைதொடர்ந்து நேற்றைய தினம், ஐஸ்வர்யாவுடன் இரவு 11 மணியளவில் தனிமையில் பேசினார் ஷாரிக்.
 
அப்போது எனக்கு உன்னுடைய குணம் பிடிச்சிருக்கு, நீ ஜாலியா பேசுறது, சிறு பிள்ளை தனமாக நடந்துக்கொள்வது என அனைத்தும் பிடித்திருப்பதாக கூறுகிறார்.

மேலும் உன்னை, பார்த்ததுமே தனக்கு மிகவும் பிடித்து விட்டதாக வெளிப்படையாக ஐஸ்வர்யாவிடம் கூறுகிறார் ஷாரிக்.  தொடந்து பேசிய ஷாரிக் இது எப்படி முடியப்போகிறது என தனக்கு தெரிய வில்லை என்றும் தெரிவிக்கிறார்.

இதைதொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா... நேற்று கூட, யாசிக்காவிடம் உன்னை தனக்கு மிகவும் பிடிக்கும் ஷாரிக் ரொம்ப நல்லவன் என கூறியதாக சொல்கிறார். அதேபோல் உன்னுடைய நட்பை நான் இழக்க விரும்ப வில்லை...என்றும் கூறுகிறார். 

மேலும் தனக்கு நிறைய பொறுப்புகள் இருப்பதாகவும், நான் யாரையும் இழக்க விரும்பவில்லை. தற்போது என் குடும்பத்தை தலைவரா நான் தான் பார்த்துக்கொள்கிறேன் என்று தெரிவிக்கிறார். 

இதற்கு ஷாரிக் 1000 முறை கேட்டாலும் இது தான் என் பதில்... உன்னை எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு, பிக் பாஸ் நூறாவது நாள் வரைக்கும் நான் இப்படிதான் இருப்பேன் எதுன்னாலும் அதுக்கு பிறகு முடிவு செய்துக்கொள்ளலாம் என்று சூசகமாக தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார். மேலும் நான் வாழ்க்கையில் நிறைய இழந்திருக்கிறேன் என கூறுகிறார். இதற்கு ஐஸ்வர்யா, வருத்தப்படதே என சமாதானம் செய்கிறார். 

ஓவியா - ஆரவ் காதல் போல் அடுத்ததாக பிக்பாஸ் வீட்டில் இவர்கள் காதல் மலரும் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பாக உள்ளது.