கொரோனா லாக்டவுன் ஆரம்பித்ததில் இருந்தே மீரா மிதுனுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. எல்லாரும் என்னை காப்பியடிக்கிறார்கள், என்னை பார்த்து போட்டோ ஷூட் செய்கிறார்கள் என புலம்பி வந்தவர். திடீரென தன்னுடைய வளர்ச்சியை ஒட்டுமொத்த கோலிவுட்டும் சேர்ந்து தடை செய்துவிட்டதாகவும், அதனால் தான் பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் ஹீரோயினாக ஜொலிப்பதாகவும் ஓவராக பெருமை பேசி வந்தார். 

தன்னை த்ரிஷா காப்பியடிப்பதாக கூறிவந்த மீரா மிதுன், த்ரிஷா இது உங்களுக்கான கடைசி வார்னிங். அடுத்தமுறை நீங்கள் இதே மாதிரி உங்களுடைய போட்டோவை என்னைப் போலவே இருப்பதற்காக போட்டோ ஷாப் செய்து நீண்ட முடி உள்ளிட்டவற்றை மார்பிங் செய்து வெளியிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். உங்கள் மனசாட்சிக்கு தெரியும் என நினைக்கிறேன். வளருங்கள். உங்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை தேடி கொள்ளுங்கள்" என பதிவிட்டிருந்தார்.

 

இதையும் படிங்க: மருத்துவ செலவிற்கு உதவி கேட்ட பொன்னம்பலம்... மருத்துவமனைக்கே பணம் அனுப்பி வைத்த தல அஜித்...!

கோலிவுட்டின் டாப் ஸ்டார்களான ரஜினி, விஜய்யையும் தரக்குறைவாக விமர்சித்து மீரா மிதுன்,  “கன்னடர் ரஜினிகாந்தும், கிறிஸ்துவர் விஜய்யும் என் பெயரை கெடுக்க முயற்சிக்கிறார்கள். சைபர் புல்லியிங் பற்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க நான் தயங்கமாட்டேன். கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்” என பொங்கினார். அதனை நெட்டிசன்கள் கண்டபடி ட்ரோல் செய்தனர். 

 

இதையும் படிங்க: கோடிகளை கொட்டிக் கொடுக்க வந்த தயாரிப்பாளர்... தெருக்கோடி வரை விரட்டி விட்ட சாய் பல்லவி...!

ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாத மீரா மிதுன் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கோலிவுட்டில் நெபோடிசம் கிடையாது என கூறி வந்தனர். ஆனால் சமீபத்தில் நடிகர் ஷாந்தனு குரூப்பிசம் இருப்பதாக ஒப்புக்கொண்டார். இந்த குரூப்பிசத்தால் தான் அவருக்கு மாஸ்டர் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. நீங்களும் நெபோடிசம் பொருள் தானே, பாக்யராஜ் மகன் தானே நீங்க. கோலிவுட்டில் மொத்தம் 4 குரூப் இருக்கு முதலில் கமல்ஹாசன் மற்றும் குடும்பத்தினர், எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் குடும்பத்தினர், சிவக்குமார் அண்ட் பேமிலி, நான்காவதாக குரூப் ஆன் ஸ்கிரீனில் சத்தமில்லாமல் இருந்தாலும், ஆப் ஸ்கிரீனில் அப்பா, பிள்ளை ஆட்டம் கொஞ்சம் அதிகமாக தான் இருக்கு என ஜாடையாக சிம்புவை வம்பிழுத்துள்ளார். இதனால் கடுப்பான நடிகர்களின் ரசிகர்கள் மீரா மிதுனை வேற லெவலுக்கு கலாய்த்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ...