தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்ற தரமான எண்ணம் கொண்டவர். தன்னிடம் உதவி என வரும் பலருக்கும் சத்தமில்லாமல் உதவி வருகிறார். தற்போது தீவிர சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த நடிகர் பொன்னம்பலம் பகிர்ந்து கொண்ட மலரும் நினைவுகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

 

இதையும் படிங்க: கோடிகளை கொட்டிக் கொடுக்க வந்த தயாரிப்பாளர்... தெருக்கோடி வரை விரட்டி விட்ட சாய் பல்லவி...!

1990களில் வில்லன் நடிகராகப் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பொன்னம்பலம். சண்டைக் கலைஞராகத் திரையுலகில் அறிமுகமாகி நடிகராக மாறினார். சமீபத்தில் பிக்பாஸ் சீஸன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில் திடீரென சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்த கமல் ஹாசன், பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்கு உதவினார். அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கான பணத்தை ஏற்றுக்கொண்டார். 

 

இதையும் படிங்க: ஆண் நண்பர்களுடன் குடியும் கும்மாளமுமாக அமலா பால்... போட்டி போட்டு சரக்கடிக்கும் வைரல் வீடியோ...!

அதைத் தவிர பிற யாரும் தனக்கு உதவிக்கரம் நீட்டவில்லை. ரசிகர்கள் கூட ரூ.100, ரூ.500 என அனுப்பிவைத்தனர் என தனது இக்காட்டான நேரத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவங்களை கூறியிருந்தார். சமீபத்தில் உடல் நலம் தேறியுள்ள பொன்னம்பலம், “அமர்க்களம் படப்பிடிப்பின் போது தனது நண்பர் மகனின் சிகிச்சைக்காக தல அஜித்திடம் பணம் கேட்டுள்ளார். மதிய உணவு இடைவேளையின் போது அஜித்தை பார்த்த அவர், ஜி பணம் கேட்டேனே என கேட்க, நான் காலையிலேயே ஹாஸ்பிட்டலுக்கு பணம் கொடுத்து அனுப்பிட்டேனே” என சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அப்படிப்பட்ட பண்பாளர் அஜித் என  இப்போது பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார் பொன்னம்பலம்.