இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது. இந்த நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கள் திரைத்துறை அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து விதமான படப்பிடிப்புகளும் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைப்பிரபலங்கள் பலரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இருந்தாலும் தமது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

இதையும் படிங்க: அமெரிக்காவில் கொத்து, கொத்தாய் மடியும் கருப்பின மக்கள்... வெறியாட்டம் போடும் கொரோனா...!

எப்போதும் சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருப்பவர் பிக்பாஸ் கவின். தனது ரசிகர்களோடும் சோசியல் மீடியா மூலம் இணைந்திருப்பார். சரவணன் மீனாட்சி தொடரை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் பங்கேற்ற தன் மூலம் கவினின் ரசிகர்கள் பட்டாளம் ஏகபோகமாக அதிகரித்து விட்டது. தற்போது “பிகில்” படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் உடன் ‘லிப்ட்’ என்ற படத்தில் நடித்து வந்தார்.தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: நடிகை கிரணின் அந்த இடத்தில் கைவைத்த விஜய்... தாறுமாறு வைரலாகும் ஏடாகூட வீடியோ...!

இந்நிலையில் தாடி, மீசையுடன் செம்ம டேரர் லுக்கில் இருக்கும் லேட்டஸ் புகைப்படங்களை கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் தனிமைப்படுத்தலால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். சோசியல் மீடியாவில் வைரலாகும் கவின் புகைப்படங்கள் இதோ... 

View this post on Instagram

As i am suffering from quarantine.. !

A post shared by Kavin M (@kavin.0431) on Apr 7, 2020 at 6:25am PDT