விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன், மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். அந்த சீரியல் கவினுக்கு ஏற்கனவே பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமாக்கி வைத்திருந்த நிலையில், அதே தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்டார். அதற்கு முன்பு 'நட்புனா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு ஹீரோவாக அறிமுகமானார். 

ஆரம்பத்தில் தனது தவறான கேம் யுக்தியால் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த கவின், பின்னர், தன்னுடைய இயல்பான குணத்தையும், நட்பையும், அன்பையும் வெளிப்படுத்தி அனைவரின் மனங்களையும் வென்றார். இடையே லாஸ்லியா - கவின் காதல் வேறு பிக்பாஸ் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி.யை உயர்த்தியது. இதனால் கவினுக்கான ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் பல ஆர்மிக்களை ஆரம்பித்தனர். பிக்பாஸ் டைட்டில் வின்னராக கவின் தான் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க, நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் இருந்து திடீரென வெளியேறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். அதனால் ரசிகர்கள் அவர் மீது வைத்திருந்த அன்பு அதிகரிக்க ஆரம்பித்தது. 

இதையும் படிங்க: புதுமையாக சேலை கட்டி... அசத்தலாக போஸ் கொடுத்த நிறைமாத கர்ப்பிணி ஆல்யா மானசா...வைரலாகும் போட்டோஸ்...!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவின் நடிக்க உள்ள முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈகா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வினீத் இயக்க உள்ள லிப்ட் படத்தில் கவின் நாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக பிகில் திரைப்படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ பர்ஸ்ட் லுக் போஸ்டரை கவின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: ரஜினி இடத்திற்கு சிம்புவை தயார் செய்யும் கமல்... 100 கோடி சம்பளம் கேட்டதால் நட்பில் விழுந்த விரிசல்?

சுற்றிலும் ரத்தக்கறைகள் நிறைந்திருக்கும் லிப்ட் ஒன்றில் கவினும், அம்ரிதா ஐயரும் மாட்டிக்கொண்டுள்ளது போன்ற அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும் போதே அள்ளு தெறிக்கிறது. த்ரில்லர் கதையம்சத்துடன் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.