பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா.  அந்த சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆல்யா அனைவரது மனைதையும் ஈசியாக கொள்ளையடித்தார். குளிர் 100 படத்தில் ஹீரோவாக நடித்தவர் சஞ்சீவ். இவர் தான் ராஜா, ராணி தொடரில் ஹீரோவாக நடித்து வந்தார். 
அந்த சீரியலில் நடிக்கும் போதே இருவருக்குமிடையே காதல் தீ பற்றிக்கொண்டதாக கூறப்பட்டது. அதையடுத்து இருவரும் உருகி, உருகி நடித்து வெளியிட்ட டிக்டாக், டப்ஸ்மாஷ் வீடியோக்கள் உண்மையை வெளிக்கொண்டு வந்தது. 

இதையும் படிங்க: "எனக்கு அசல் தான் வேணும்"... இளம் முன்னணி நடிகரை வம்பிழுக்கும் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி...!

தற்போது கர்ப்பமாக இருக்கும் ஆல்யா மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் ஆல்யா மானசா சமீபத்தில்  சிம்பிளான காட்டன் புடவை கட்டி எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: ரஜினி இடத்திற்கு சிம்புவை தயார் செய்யும் கமல்... 100 கோடி சம்பளம் கேட்டதால் நட்பில் விழுந்த விரிசல்?

ஏற்கனவே தாய்மையின் போது பெண்கள் அழகாக தெரிவார்கள். அதிலும் அம்சமான புடவையில் இருக்கும் ஆல்யா மானசாவோ பேரழகியாக ஜொலிக்கிறார். மற்றொரு புகைப்படத்தில் பிங்க் நிற பட்டுப்புடவையை வித்தியாசமான முறையில் கட்டிக்கொண்டு செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் ஆல்யா மானசாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அழகு தேவதையாக ஜொலிக்கும் ஆல்யாவின் புகைப்படங்கள் இதோ...