நடிகை நயன்தாரா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான 'தர்பார்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பல்வேறு திரையரங்கங்களில் ஓடி வருகிறது. தர்பார் படம் நஷ்டம் எனக்கூறி விநியோகஸ்தர்கள் நாள்தோறும் புதுப்புது பிரச்சனைகளை கிளப்பி வருகின்றனர். இதனால் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நஷ்டஈடு கேட்டு மிரட்டுறாங்க... பாதுகாப்பு தாங்க என கோர்ட் படி ஏறிவிட்டார். தர்பார் களோபரம் இப்படி இருக்க, நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவோ, தனது  அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். 

இதையும் படிங்க: அவசர, அவசரமாக ரகசிய திருமணம் செய்தது ஏன்?... முதன் முறையாக மனம் திறந்த யோகிபாபு...!

அந்த வகையில் தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்துள்ளது. ஆர்.ஜே. பாலாஜியே கதை எழுதியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் நடைபெற்றது. 

இந்த படத்திற்கு கமிட் ஆன நாளில் இருந்தே நயன் செருப்பு கூட அணியாமல், அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து வருவதாக ஆர்.ஜே.பாலாஜி டுவிட்டரில் புகழ்ந்து தள்ளியிருந்தார். நயனும் விரதம் இருப்பதை சாதகமாக கொண்டு, காதலர் விக்னேஷ்சிவனுடன் கோவில், கோவிலாக வழிபாடு நடத்தினார். 

இதையும் படிங்க: மருமகன் தனுஷ் போட்ட ட்வீட்டிற்கு மாமனார் ரஜினியை திட்டும் நெட்டிசன்கள்...!

ஏற்கனவே இந்த படத்தில் பிகில் இந்துஜா நடித்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற யாஷிகா ஆனந்தும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சம்மரில் படத்தை  ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்படியோ யாஷிகா வளைச்சு, நெளிச்சு கவர்ச்சி போட்டோ போட்டதுக்கு ஒரு சினிமா சான்ஸாவது கிடைச்சுதே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.