செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த "துள்ளுவதோ இளமை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷெரின். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த ஷெரின், அதற்கு அடுத்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் போன்ற படங்களில் நடித்தார். அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் திடீரென பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக தோன்றிய ஷெரின் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

ஸ்லீம்மாக இருந்த ஷெரின், ஓவர் வெயிட் போட்டு குண்டானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாக இருந்த ஷெரின், கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து படிப்படியாக உடல் எடையை கணிசமாக குறைத்து தற்போது பழைய படி ஹீரோயின் லுக்கிற்கு மாறிவிட்டார். நச்சுன்னு ஸ்லீம்மான அப்புறம் சும்மா இருந்தால் எப்படி என தினம், தினம் மார்டன் டிரஸ், புடவை என விதவிதமான காஸ்டியூமில் அசத்தல் போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். வாவ்...! சொல்ல வைக்கும் ஷெரினின் அந்த அசத்தல் லுக் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவிக்கிறது. 

இதையும் படிங்க: ஆசை ஆசையாய் சொந்த ஊருக்குச் சென்ற பாரதிராஜா... வாசலில் காத்திருந்த அதிர்ச்சி...!

இடையில் தர்ஷன் - சனம் காதல் முறிவுக்கு ஷெரின் தான் காரணம் என்று, தர்ஷனுக்காக தான் ஷெரின் தனது குண்டான உடல் தோற்றத்தை சிக்கென்ற லுக்கிற்கு மாற்றினார் என்றும் நெட்டிசன்கள் வசைபாடி வந்தனர். அந்த பிரச்சனைகளில் இருந்து எல்லாம் தற்போது மீண்டு வந்துள்ள ஷெரின், டிக்-டாக்கில் செம்ம பிசியாக வலம் வர ஆரம்பித்தார். கூடவே விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி இளசுகளை ஏங்க வைக்கிறார். 

இதையும் படிங்க: கோடி, கோடியாய் கொடுத்தாலும் அவர் மட்டும் வேண்டாம்... வாரிசு நடிகரை ஒதுக்கும் காஜல் அகர்வால்?

நேற்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடிய ஷெரின் அதற்கு வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அம்சமான புடவையில் தலை நிறைய மல்லிகைப்பூ, முகம் மலர்ந்த புன்னையுடன் ஷெரின் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: கணவருடன் ஓவர் நெருக்கம்... சாய் பல்லவி நடிப்பை பார்த்து பொறாமைப்பட்ட சமந்தா?

அத்துடன், இன்று எனது விடியலை மிதக்கும் வைக்கும் அளவிற்கு வாழ்த்துக்களையும், அன்பையும் வாரி வழங்கியுள்ளீர்கள். நன்றி தோழர்களே நீங்கள் இந்த தனிமைப்படுத்தப்பட்ட பிறந்தநாளை சூப்பர் ஸ்பெஷலாக மாற்றியுள்ளீர்கள். இந்த ஆண்டு அற்புதமானதாகவும், சற்றே பயமுறுத்தும் விதமாகவும் உள்ளது. நான் உங்கள் அனைவரது வாழ்த்துக்களையும் படித்தேன். உங்கள் அனைவரையும் மிகவும் நேசிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.