இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழ் பெற்றார். பிக்பாஸ் சீசன் 1-ல் எப்படி ஓவியாவிற்கு குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் பட்டாளம் குவிந்ததோ அதேபோல் லாஸ்லியாவிற்கு ஆர்மிகள் தூள்பறந்தது. அவரது க்யூட்டான ஸ்மைல் மற்றும் பப்ளியான முகத்தோற்றமே அவரை பலருக்கும் பிடித்து போக வைத்தது. பிக்பாஸ் வீட்டில் காலையில் எழுந்தவுடன் ஓவியா போல நடனமாடி அசத்தினார். அதேபோல் யார் பிரச்னைக்கும் செல்லாமல் எதிலும் சிக்காமல் சேஃப் கேம் ஆடி நல்ல பிள்ளை என்ற பெயர் பெற்றார். 

இடையே கவின் - லாஸ்லியா காதல் விவகாரம் வேறு விஜய் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி.க்கு பக்க பலமாக இருந்தது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் காதல் பறவைகளான, லாஸ்லியா மற்றும் கவின் வெளியில் வந்ததில் இருந்து யாரோ போல் தான் இருக்கிறார்கள். உலக நாயகன் கமலஹாசன் வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று, கடைசியில் காதலர்கள் என பெயரெடுத்தவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது, இருவரும் காதலர்கள் போல் நடந்து கொண்டாலும் வெளியே வந்ததும், இருவருக்கும் சம்மந்தமே இல்லாதது போல் நடந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கையில் கிளாஸ் உடன் ஹாட் பிகினி போஸ்... ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த ஹன்சிகா...!

இப்போது கவின், லாஸ்லியா காதலிக்கிறார்களா? என்பதே இருவரது ஆர்மிக்கும் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இதனிடையே லாஸ்லியாவை வெள்ளித்திரையில் காண வேண்டுமென தமிழ் ரசிகர்கள் தவம் கிடந்தனர். அவர்களது கனவை நிறைவேற்றும் விதமாக லாஸ்லியாவிற்கும் படவாய்ப்புகள் குவிந்ததாக கூறப்பட்டது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த முகென், தர்ஷன், கவின், சாக்‌ஷி அகர்வால் என பலரும் சினிமாவில் பிசியாக நடிக்க உள்ளனர். 

இதையும் படிங்க: அவசர அவசரமாக மருத்துவமனைக்குச் சென்ற அஜித், ஷாலினி... காரணம் இதுவா?

சினிமாவில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைத்து உள்ள லாஸ்லியா ஸ்லிம் லுக்கில் பார்க்க செம்ம க்யூட்டாக மாறிவிட்டார். லாஸ்லியா, ஆரியுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் புதிய படத்திற்கு பிப்ரவரி மாதம் பூஜை போடப்பட்டு, அந்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. இதை தொடர்ந்து லாஸ்லியா ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகும் “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தில் ஹர்பஜனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.  இந்தப்படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்க உள்ளனர். 

இதையும் படிங்க: “நாங்க இந்தியாவே இல்லைன்னு எழுதிக்கோ போ”... தீயாய் தெறிக்கும் வசனங்களுடன் வெளியானது க/பெ ரணசிங்கம் டீசர்...!

அந்த படத்தில் நடித்து வரும் காமெடி நடிகர் சதீஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக “பிரண்ட்ஷிப்” படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதேபோன்று அந்த படத்தில் நடித்து வரும் லாஸ்லியாவின் ஹீரோயின் லுக்குடன் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பார்க்க செம்ம சூப்பராக இருக்கும் லாஸ்லியாவின் அந்த புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.