பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் க/பெ ரணசிங்கம். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி, பூ ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசைமையத்துள்ளார். நேற்று ஐஸ்வர்யா ராஜேஷ் கையில் விலங்குடன் நிற்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. 

இதையும் படிங்க: கர்ப்பமாக இருப்பது உண்மை தான்... அம்மாவானதை உறுதி செய்தார் மைனா நந்தினி...!

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும் வெறும் கணவன் - மனைவி இடையேயான பிரச்சனையாக இருக்கும் என முதலில் ரசிகர்கள் நினைத்தனர். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி கணவன், மனைவியாக நடித்துள்ளனர். தண்ணீர் பிரச்சனை குறித்து பேசும் படம் என்பது பார்க்கும் டீசரை பார்க்கும் போதே தெரிகிறது. 

இதையும் படிங்க: லாக்டவுனால் மன அழுத்தம்...“வசந்த மாளிகை” பட நடிகை வாணிஸ்ரீ மகன் தற்கொலை?

சாதி மத அரசியலை தாண்டி இன்னைக்கு தண்ணியையும் காற்றையும் வைத்து தான் மொத்த உலக அரசியலும் நடக்க போகுது என விஜய் சேதுபதி பேசும் வசனத்துடன் டீசர் தொடங்குகிறது. ”2000 பேருக்கு வேலை கொடுத்துட்டு விவசாயம் பண்ணிட்டு இருந்த 50 ஆயிரம் பேரை தெருவில் நிப்பாட்டினா எப்படி சார்”, நம்ம ஊரு பொம்பளைங்க தண்ணி வண்டி தள்ளிக்கிட்டு திரியுறாங்க, அந்த கரண்ட் கம்பெனிகாரன் ஒரு லட்சம் லிட்டர் தண்ணி எடுக்குறான் பிளேட் கழுவ, அதை பார்த்துக்கிட்டு சும்மா இருக்க சொல்றியா? என விஜய் சேதுபதி பேசுவது போன்ற வசனங்கள் பரபரப்பை கூட்டுகிறது. 

இதையும் படிங்க: அவசர அவசரமாக மருத்துவமனைக்குச் சென்ற அஜித், ஷாலினி... காரணம் இதுவா?

இதில் இருந்து பெயர் எடுத்துடுவியா?... இதுதானே இந்த ரேஷன் கார்டு தானே எதுவும் வேண்டாம் போ... நாங்க இந்தியாவே இல்லைன்னு எழுதிக்க போ... என அரசு அதிகாரி ஒருவரிடம் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் அரசியல் வசனங்களுடன் படத்தின் டீசர் படு சூப்பராக நிறைவடைகிறது. தமிழ் சினிமாவில் தண்ணீர் பிரச்சனையை மையமாக வைத்து பல படங்கள் எடுக்கப்பட்டுள்ள போதும், க/பெ ரணசிங்கம் படத்தின் டீசரை பார்த்த பிறகு ரசிகர்களுக்கு நிச்சயம் தனி எதிர்பார்ப்பு கிளம்பும் என்பதில் சந்தேகம் இல்லை.