தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த "தேசமுருடு" என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார். பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சது. அதற்கு பிறகு தமிழ் திரையுலகிற்கு வந்த ஹன்சிகா, 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சிங்கம் '2, 'மான் கராத்தே', 'பிரியாணி' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார்.

இதையும் படிங்க: டிரஸ் போட்டிருக்கீங்களா?... பிரபல தொகுப்பாளினி டிடி-யின் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!

ஹன்சிகாவின் கொழு, கொழு அழகை பார்த்து அவரை குட்டி குஷ்பூ என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர்.தற்போது தனது முன்னாள் காதலரான சிம்புவுடன் "மகா" படத்தில் நடித்த ஹன்சிகாவின் கைவசம் பெரிதாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லை. உடனே அதிரடி கவர்ச்சி பாதைக்கு மாறிய ஹன்சிகா ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த போட்டோஸை சோசியல் மீடியாவில் வைரலாக வலம் வர வைத்தார். 

இதையும் படிங்க: கர்ப்பமாக இருப்பது உண்மை தான்... அம்மாவானதை உறுதி செய்தார் மைனா நந்தினி...!

தனது கொழுக்கு மொழுக்கு உடலை குறைத்து ஒல்லி, பெல்லி லுக்கிற்கு மாறியுள்ள ஹன்சிகா. விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். மாலத்தீவில் ஹாட் பிகினியில் போஸ் கொடுத்த ஹன்சிகாவின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்தது. இந்நிலையில் தனது மற்றொரு பிகினி போட்டோவை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். கறுப்பு நிற பிகினியில் கையில் சரக்கு கிளாஸுடன் ஹன்சிகா கொடுத்துள்ள போஸை பார்த்து ரசிகர்களுக்கு போதை ஏறுகிறது. அப்படி ஹன்சிகா கொடுத்துள்ள கலக்கல் போஸ் இதோ...