பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் காதல் பறவைகளான, லாஸ்லியா மற்றும் கவின் வெளியில் வந்ததில் இருந்து யாரோ போல் தான் இருக்கிறார்கள். உலக நாயகன் கமலஹாசன் கடந்த வருடம் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு விளையாடி, கடைசியில் காதலர்கள் என பெயரெடுத்தவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது, இருவரும் காதலர்கள் போல் நடந்து கொண்டாலும் வெளியே வந்ததும், இருவருக்கும் சம்மந்தமே இல்லாதது போல் நடந்து கொண்டனர்.

ஆனால் இவர்களுடைய ஆர்மியை சேர்ந்தவர்களோ, விடா பிடியாக, 'கவிலியா' என்கிற பெயரில் இருவரும் இணைந்திருப்பது போல பல புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இருவரும் காதலில் இல்லை என்பதை பலமுறை இலை மறை காயாக காட்டினாலும் ரசிகர்கள் விடுவதாக இல்லை. அதேபோல் கவின், லாஸ்லியாவும் காதல் குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு வாய் திறப்பதாக தெரியவில்லை. 

 

இதையும் படிங்க: நிறைமாத கர்ப்பிணியாக பாடகி சைந்தவி... முதன் முறையாக வெளியான க்யூட் போட்டோஸ்...!

இந்நிலையில் சில தினங்களுக்கு முன், கவின் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கண்ணாடி முன் நின்று எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்து அதில் ’எடுக்காத டிரஸ்ல போட்டோ எடுத்து வச்சுகிட்டா எப்போதாவது உதவும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இவர் இந்த பதிவை போட்ட,  அடுத்த சில நிமிடங்களில் லாஸ்லியா இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அதே போல் கண்ணாடி முன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து,  ’வாழ்க்கை உங்களுக்கு ஏதாவது கற்பிக்க முயற்சிக்கிறது, எனவே உங்கள் தவறுகளை ஏற்றுக்கொண்டு உங்களை கண்ணாடியில் பாருங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவால் கவினை தான் லாஸ்லியா ஜாடையாக விமர்சிப்பதாக கூறப்பட்டது. 

இதையும் படிங்க: சீரியல் நடிகை மேக்னா விவாகரத்திற்கு காரணம் நானா?....மனம் திறந்த நடிகர் விக்கி...!

சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமான கவின், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி, தொட்டி எல்லாம் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் கவின், தற்போது லிப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். கவினை பெரிய திரையில் காண ரசிகர்கள் பலரும் ஆவலாக காத்திருக்கும் நிலையில், அசத்தலான போட்டோ ஒன்றை வெளியிட்டு லைக்குகளை குவித்துள்ளார். 

இதையும் படிங்க:  காதலருடன் பிரேக் அப்?... நயன்தாராவை அடுத்து இளம் நடிகையை பாடாய் படுத்தும் காதல்...!

கவின் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் படித்த காலத்தில் எடுத்த இளமை கால புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த  கவின் ஆர்மி ஆகா... ஓஹோ... என புகழ்ந்து தள்ளி வருகிறது. சிலரோ இந்த போட்டோவை பார்த்தால் லாஸ்லியாவே பீல் பண்ணுவாங்க என காமெடியாக கமெண்ட் செய்துள்ளனர்.