விஜய் டிவியில் ஒளிபரப்பான, 'அவளும் நானும்' சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர், நடிகை மேக்னா வின்செண்ட். தமிழில் பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தில் நடித்துள்ளார்.  மலையாள நடிகையான மேக்னா, மாடலாகவும் பிரபலமானவர். அதே போல் மலையாலயாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் தெய்வம் தந்த வீடு, பொன்மகள் வந்தாள் ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் மேக்னா, டான் டோனி என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன், கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு கணவன் - மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த இருவரும், சமீபத்தில் சட்டப்படி விவாகரத்து பெற்றனர். 

இதையும் படிங்க: கறுப்பு நிற ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி... ரசிகர்களை ஏங்க வைத்த சாக்‌ஷி...!

இந்நிலையில் வாணி ராணி, இளவரசி உள்ளிட்ட சீரியல்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர் விக்கி. தற்போது பொன்மகள் வந்தாள் சீரியலில் மேக்னாவுடன் நடித்து வருகிறார். ஹரிப்பிரியா என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்ட விக்கிக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் பொன் மகள் வந்தாள் சீரியலில் நடித்த போது விக்கிக்கும், மேக்னாவிற்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவின. 

இதையும் படிங்க: “முத்தம் கொடுக்க முடியாது”... ஷூட்டிங் ஸ்பார்ட்டில் கமலை கவுத்த பிரபல நடிகை...!

தீயாய் பரவி வரும் வதந்தி குறித்து நடிகர் விக்கி விளக்கமளித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே இப்படி வதந்தி பரவி வருகிறது. சீரியலில் நாயகன், நாயகி இணைந்து நடித்தால் நிஜத்திலும் காதல் செய்து வருவதாக பேசுகிறார்கள். எல்லார் குடும்பத்திலும் சண்டைகள் வருவது சகஜம். அப்படி தான் நடிகர், நடிகைகள் குடும்பத்திலும் பிரச்சனைகள் வருகின்றன. எனக்கு 6 வ்யதில் மகன் இருக்கிறான். அவனது எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும். தேவையில்லாமல் எங்களது வாழ்க்கையை சீர்குலைக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.