தமிழகத்தில் ஒரு கூட்டம் கந்தசஷ்டி கவசத்தை பற்றி தவறாக சித்தரிக்க தொடங்கி இருக்கிறது. அதிலும் கறுப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனலின் செயல் பெரும் அதிருப்தியையும், கண்டனத்தையும் எழுப்பி இருக்கிறது. இதுகுறித்து தற்போது இந்து மக்கள் அமைப்புகளும் பாஜக மற்றும் இந்து சமூக அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தற்போது இந்த விஷயம் அரசியலையும் தாண்டி சினிமா உலகத்தினர் குரல் கொடுக்கும் நிலைக்கு வந்துள்ளது.

 

இதையும் படிங்க: கண்ணீர் விட்ட அமலா பால்... “இதற்கு வேறு வழியில்லையா” என கதறல்... காரணம் இது தான்...!!

இது குறித்து நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி என்கிற நட்ராஜ் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்.."போங்கடா முட்டாளுங்களா… முருகனை பத்தி  சொல்ல.. சிவனாலேயே  முடியாதுடா..சுக்குக்கு மிஞ்சிய  மருந்தும்  கிடையாது…  சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும்  கிடையாது…  சரவணபவாய நமஹ…வெற்றிவேல்  வீரவேல்….நான் பேசற பாஷையும் போட்டுட்டு இருக்குற சட்டையும் தான் உங்க பிரச்சனைன்னா  மாறவேண்டியது நான் இல்லை… நீங்கதான் என்று பதிவிட்டிருந்தார். 

 

இதையும் படிங்க:  “என் புருஷனை ஏன் வச்சிட்டு இருக்க”... வனிதாவை சகட்டுமேனிக்கு வறுத்தெடுத்த பீட்டர் பால் முதல் மனைவி.....!

நடிகர் பிரசன்னாவும் “எவரும் எவருடைய நம்பிக்கையையும் ஓரளவு கடந்து விமர்சிக்கிறேன் என்று கொச்சைப்படுத்துவது பெரிதாய் பேசப்படும் மதசார்பின்மைக்கு நல்லது அல்ல. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு பெரியது.அதை மதிக்க தெரியாத போக்கிரிகள் யாராயினும், எவருக்கெதிராயினும் தண்டிக்கப்பட்டால் மட்டுமே மதச்சார்பற்ற நாடாக இருக்க முடியும். மதச்சார்பின்மை நம்பிக்கை கொள்ள செய்வது இன்றளவில் மதநம்பிக்கையினும் அதி முக்கியம்” என்று கண்டித்துள்ளார். 

 

இதையும் படிங்க: லெஸ்பியனாக நடித்த நித்யா மேனன்... சர்ச்சையை கிளப்பிய லிப் லாக் காட்சி...!

இவர்களைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகர் பரணி கறுப்பர்  கூட்டம் யூ-டியூப் சேனலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கந்த சஷ்டி கவசத்தை உலகமெங்கும் உள்ள கோடான கோடி  தமிழ் மக்கள்  இந்து சமய மக்கள் போற்றிப் பாடும் பொழுது, அதைத் சீர்குலைக்கும் வண்ணம் தவறாக முறையற்ற வகையில் பிறந்த மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை செய்த செயலை நாம் கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவனை அப்பன் முருகனே பார்த்துக்கொள்வான்.  ஆனால் மதசார்பற்ற என்று பேசும் மதசார்பு அறிவுஜிவீகளே இதை நீங்கள் கேட்காதது கண்டிப்பதும் நான் வணங்கும் எங்க அப்பன் முருகன் உங்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறான்  என தெரிவித்துள்ளார்.