இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி கேன்சர் காரணமாக இன்று இரவு 7 மணியளவில் உயிரிழந்த நிலையில், அவரது உறவினரும் நடிகையுமான, ஹாசினி கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி கேன்சர் காரணமாக இன்று இரவு 7 மணியளவில் உயிரிழந்த நிலையில், அவரது உறவினரும் நடிகையுமான, ஹாசினி கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி ஒரு பின்னணி படகியாகவும், இசையமைப்பாளராகவும் மிகவும் பிரபலமானவர். 'பாரதி' படத்தில் இடம்பெற்ற 'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடலை பாடியதற்காக சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பெற்றார். 

Bhavatharini Raja: ஆங்கில மொழி உட்பட... மொத்தம் 5 மொழிகளில்.. இதனை படங்களுக்கு இசையமைத்துள்ளாரா பவதாரிணி?

சமீபத்தில் இவருக்கு புற்று நோய் இருப்பது தெரியவந்த நிலையில்... இயற்க்கை முறையில் சிகிச்சை எடுத்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து ஸ்ரீலங்கா சென்றுள்ளார். தற்போது இளையராஜாவும் அங்கு தான் உள்ளார். வரும் 28-ஆம் தேதி அவரின் மியூசிக் கான்செர்ட் ஒன்று அங்கு நடைபெறுவதால், மகளை கவனித்து கொண்டே இசை பணியில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் இன்று இரவு 7 மணியளவில்... மூச்சு திணறல் ஏற்பட்டு பவதாரிணி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 47 வயதாகும் இவர் தன்னுடைய கணவருடன் வசித்து வந்தார். பவதாரிணிக்கு குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்த திரையுலக பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள பவதாரிணி மரணம் குறித்து, அவருடைய உறவினரும், நடிகையுமான ஹாசினி வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bhavatharini: இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி சற்றுமுன் காலமானார்!

இந்த வீடியோவில் ஹாசினி, "பவதாரிணிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் கேன்சர் 4-ஆவது ஸ்டேஜில் இருப்பது கண்டு பிடிக்க பட்டதாகவும், இயற்கை முறையில் சிகிச்சை எடுப்பதற்காக இலங்கை சென்றுள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை எடுப்பதற்கு முன்பாகவே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. என கண்ணீர் மல்க கூறியுள்ளார். ஹாசினி இளையராஜாவின் உடன் பிறந்த தம்பி மகள் என்பது குறிப்பிடத்தக்கது.