பிக் பாஸ் வீட்டிலோ ஒவ்வொரு வாரமும்  பாவனி நாமினேட் செய்யப்படுகிறார். இருந்தும் இதுவரை அவர் வெளியேற்றப்படவில்லை..இதற்கு காரணமா பாவனி ஆர்மிதானாம்... அவர்கள் ஒவ்வொரு வாரமும் அதிக ஓட்டுக்கள் போட்டு பாவனியை காப்பாற்றி வருவதாக ரசிகர்கள் மார்த்தட்டி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 5-ல் ஒருவழியாக காதல் காட்சிகள் ஆரம்பமாகிவிட்டன. தற்போது வீட்டில் போட்டியாளர்களின் பிரியங்கா, தாமரை, பாவனி என 3 பெண் போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் பாவனி மீது ஆரம்பத்திலிருந்தே கணவரை இழந்தவர் என்கிற கரிசனத்தை ஆண் போட்டியாளர்கள் காட்டி வந்தனர். அதிலும் அபிநய் அதீத அன்பை பொலிந்து வந்தார். இது பாவனிக்கும் ஆறுதலை தந்தது. பின்னர் திடீரென அபிநய் தன்னை காதலிப்பது பிடிக்கவில்லை என பாவனி மற்ற ஹவுஸ்மேட்டிடம் கூறினார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இருந்தும் அபிநய் தனது நிலையில் இருந்து விலகுவதாக தெரியவில்லை. இது தொடர்பாக ஹவுஸ்மேட்ஸை தொடர்ந்து கமலும் கடந்த வாரம் கலாய்த்து விட்டார். பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் பலி போட்டு கொண்டனர்.

இதற்கிடையே வைல்ட் கார்ட் என்ட்ரியில் வீட்டிற்குள் வந்த அமீர் கொஞ்ச நாட்களிலேயே பாவனியை வசியம் செய்து விட்டார். ஏற்கனவே கடந்த வாரத்தில் ஒருவருக்கொருவர் மீதுள்ள ஈர்ப்பை இருவரும் வெளிப்படுத்தியிருந்தனர். பின்னர் பாவனியை நெருங்கிய அமீர் ரகசியம் கூறுவது போல அருகில் சென்று பாவனியின் கன்னத்தில் குத்தமிட்டுள்ளார் பரபரப்பை கிளப்பினார்.

இவ்வாறு பிக் பாஸ் சீசன் 5-ல் முக்கிய சுவாரஸ்யமாக இருந்து வரும் பாவனிக்கு வெளியில் ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு...ஆனால் பிக் பாஸ் வீட்டிலோ ஒவ்வொரு வாரமும் பாவனி நாமினேட் செய்யப்படுகிறார். இருந்தும் இதுவரை அவர் வெளியேற்றப்படவில்லை..இதற்கு காரணமா பாவனி ஆர்மிதானாம்... அவர்கள் ஒவ்வொரு வாரமும் அதிக ஓட்டுக்கள் போட்டு பாவனியை காப்பாற்றி வருவதாக ரசிகர்கள் மார்த்தட்டி வருகிறது.