நல்ல வேளை நான் பொன்னியின் செல்வன் எடுக்கல... எடுத்திருந்தா சொதப்பிருப்பேன் - பாரதிராஜா ஓபன் டாக்
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாரதிராஜாவும் கலந்துகொண்டார்.
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்களும் கலந்துகொண்டனர். அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜாவும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
அப்போது தானும் பொன்னியின் செல்வன் கதையை இயக்க முயற்சித்ததாக கூறினார். அதில் அவர் பேசியதாவது : “நான் 9-ம் வகுப்பு படிக்கும்போதே பொன்னியின் செல்வன் கதையை படிச்சிட்டேன். இதனை எம்.ஜி.ஆர். படமாக எடுக்க ஆசைப்பட்டார். அவர் தயாரிப்பில் கமலையும், ஸ்ரீதேவியையும் நடிக்க வைத்து என்னை இயக்க சொன்னார்.
இதையும் படியுங்கள்... தேவதை வம்சம் நீயோ.! குந்தவை திரிஷாவின் கியூட்னஸில் கவிழ்ந்த ரசிகர்கள்.! PS2 ஆடியோ லான்ச் போட்டோஸ்!
குறிப்பாக கமலை வந்தியத்தேவனாகவும், ஸ்ரீதேவியை குந்தவையாகவும் நடிக்க வைக்க நினைத்தார். ஆனால் அந்த சமயத்தில் எம்.ஜி.ஆருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அது நடக்காமல் போனது. நல்ல வேளை நான் அதை எடுக்கல. எடுத்திருந்தா சொதப்பிருப்பேன் என நினைத்து தான் கடவுள் அப்படத்தை மணிரத்னத்திடம் கொடுத்து இருக்கிறார்.
இப்படத்தில் ஹீரோயின்களை லட்டு லட்டாக தேர்ந்தெடுத்து இருக்கிறார் மணிரத்னம். நந்தினி, குந்தவை, பூங்குழலி என எல்லோரையும் காதலிக்கலாம் போல. பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களுக்கு மணிரத்னம் எவ்வளவு அழகாக உயிர்கொடுத்துள்ளார். இதையெல்லாம் பார்க்க கல்கி உயிரோடு இல்லாமல் போய்விட்டார்” என பேசினார்.
இதையும் படியுங்கள்... பெற்ற தாயின் ஒரு மார்பை வெட்டி எடுத்துக்கொள் என்கிறீர்! பல கேள்விக்கு விடை சொல்ல வரும் 'பொன்னியின் செல்வன் 2'