Bharathiraja is a great monkey praised by Parthiban
பாரதிராஜா, விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “குரங்கு பொம்மை”.
நித்திலன் இயக்கியுள்ளார்,
ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்எல்பி தயாரித்துள்ளது.
அஜனீஷ் லோக்நாத் இசையமைத்து உள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பாரதிராஜா, எஸ்.வி.சேகர், பார்த்திபன், இயக்குநர் தரணி, நடிகர்கள் சிபிராஜ், விதார்த், மைம்கோபி, தயாரிப்பாளர்கள் பி.எல்.தேனப்பன், ஞானவேல்ராஜா, டான்ஸ் மாஸ்டர் ராதிகா, ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்எல்பி நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய பார்த்திபன், தன் குருவின் குருவான பாரதிராஜாவை “குரங்கு” என்று பாராட்டினார்.
ஆம். குரங்கு என்றுதான் பாராட்டினார். பார்த்திபன் பேசியது:
"பாரதிராஜாவை பாராட்டுவதற்கு வாழ்நாள் போதாது. தமிழ்சினிமா ஒட்டுமொத்தமாக பாரதிராஜாவுக்கு ஒரு பெரிய பாராட்டுவிழா எடுக்க வேண்டும்.
இந்த படத்தின் தலைப்பு ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. பாரதிராஜாவையும் வித்தியாசமாக பாராட்ட ஆசைப்படுகிறேன்.
பாரதிராஜா நல்ல இயக்குநர், சிறந்த மனிதர் என்று எல்லோரும் சொல்வாங்க. ஆனால், நான் என்ன சொல்கிறேன்னா பாரதிராஜா ஒரு சிறந்த “குரங்கு”.
குரங்கு நான்கு எழுத்து. கு- நல்ல குணவான், ர - சிறந்த ரசனையாளர், ங் - இங்கிதம் தெரிந்தவர், கு - குவாலிட்டியானவர். இதுதான் அந்த குரங்குக்கு அர்த்தம்” என்று பாராட்டிப் பேசினார்.
