லியோ படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த புதுக்கோட்டையை சேர்ந்த ரசிகர்கள், இஸ்ரேல் - பாலஸ்தீன போரை நிறுத்திட கோரி இரண்டு நிமிடங்கள் மௌனத்தை கடைபிடித்தனர். இந்த செயல் பலரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தது. 

லியோ திரைப்படத்தின் முதல் காட்சிக்காக புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் மேளதாளத்துடன் வந்த விஜய் மக்கள் இயக்கத்தினர், திரையரங்கின் முன்னதாக இஸ்ரைல் பாலஸ்தீன போரை நிறுத்திட கோரி இரண்டு நிமிடங்கள் மௌனத்தை கடைபிடித்தனர்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள தனியார் திரையரங்கில் இன்றைய தினம் 9.30 மணிக்கு நடிகர் விஜய் நடித்து வெளியாகி உள்ள லியோ திரைப்படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. இதற்காக 8.45 மணி அளவில் கீரமங்கலம் சிவன் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்ற விஜய் மக்கள் இயக்கத்தினர் பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக திரையரங்கியை நோக்கி ஊர்வலமாக சென்றனர். 

அங்கு குவிந்திருந்த விஜய் ரசிகர்கள் அனைவரும் படத்தின் டிக்கெட்டு களுக்காக முண்டியடித்துக் கொண்டிருந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நடைபெற்று வரும் போரை தடுக்க கோரி மௌனம் கடைப்பிடிக்க முடிவு செய்தனர். 

முதல் நாளே வசூலில் சம்பவம் செய்ய காத்திருக்கும் லியோ! ப்ரீ புக்கிங்கில் மட்டும் எத்தனை கோடி கலெக்ஷன் தெரியுமா?

இதனை அடுத்து அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் அனைவரும் திரையரங்கிற்குள் செல்லும் வரை காத்திருந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் ரசிகர்கள் அரங்கிற்குள் சென்ற பின்னதாக இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் போர் குறித்தும் விஜய் மக்கள் இயக்கம் குறித்தும் பேசி விட்டு இரண்டு நிமிடங்கள் மௌனத்தை கடைபிடித்தனர்.

Leo LEAKED: தடையை மீறி சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியான 'லியோ'..! செம்ம அப்செட்டில் விஜய் மற்றும் படக்குழு!

பின்னர் பேசிய விஜய் மக்கள் இயக்க ஒன்றியத் தலைவர் சண்முகநாதன் கூறுகையில், உலக மக்களும் சரி, விஜய் மக்கள் இயக்கத்தினரும் சரி, நடிகர் விஜயும் சரி நாங்கள் அனைவரும் விரும்புவது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே நடைபெறும் போரானது நிறுத்தப்பட வேண்டும் என்பது தான். உலக நாடுகளும் தலையிட்டு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம் போரை நிறுத்திட பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டுமென விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்றார். திரைப்படம் பார்ப்பதற்கு முன்பு விஜய் ரசிகர்கள் இப்படி செய்தது அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை குவித்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D