முதல் நாளே வசூலில் சம்பவம் செய்ய காத்திருக்கும் லியோ! ப்ரீ புக்கிங்கில் மட்டும் எத்தனை கோடி கலெக்ஷன் தெரியுமா?
தளபதி விஜயின் 'லியோ' திரைப்படம் முதல் நாளில் மிகப்பெரிய வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்படம் ப்ரீ புக்கிங்கில் மட்டும், எத்தனை கோடி வசூலித்துள்ளது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Leo Pan India Release:
தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள 'லியோ' திரைப்படம் உலகம் முழுவதும், இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் ஆகி உள்ளது.
Leo Released 9Am in tamilnadu:
முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, 'லியோ' படத்தின் நான்கு மணி காட்சி மற்றும் ஏழு மணி காட்சிகள் தமிழகத்தில் திரையிடப்படாது என தமிழக அரசு அறிவித்த நிலையில், ஒன்பது மணிக்கு முதல் காட்சி அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்பட்டது.
Celebrates watch in leo movie:
முதல் நாள் முதல் காட்சியை பார்க்க, ரசிகர்களோடு பல திரையுலக பிரபலங்களும் திரையரங்குகளில் கூடினர். மேலும் ரசிகர்களுடன் சேர்ந்து ஆரவாரம் செய்து தளபதியின் 'லியோ' படத்தை கண்டு ரசித்தனர். இது குறித்த புகைப்படங்கள், இன்று காலை முதலே சமூக வலைதளத்தில் வெளியானது. அதை போல் ரசிகர்களும் திரையரங்கு முன்பு ஆட்டம், பாட்டம், பட்டாசு, இனிப்புகள், வழங்கி தளபதியின் 'லியோ' படத்தை வரவேற்றனர்.
Leo in LCU movie:
லியோ படத்திற்கு சமூக வலைத்தளத்தில் சிலர் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வந்தாலும், பலர் முதல் பாதியை வியந்து பாராட்டியுள்ளனர். இரண்டாம் பாதி மிகவும் லென்த்தாக உள்ளதாகவும், ஏற்கனவே சில படங்களில் பார்த்த காட்சியை பார்ப்பது போல் இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். ஆனால் பாடலும் லோகேஷ் கனகராஜுன் LCU லிஸ்டில் இணைந்துள்ளது மட்டும் இன்றி, படு மாஸான ஆக்ஷன் என்டர்டெயினராக உள்ளது.
Leo Pre Booking Collection
முதல் நாளிலேயே 'லியோ' வசூலில் செம்ம சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது ப்ரீ புக்கிங்கில் மட்டுமே சுமார் 100 கோடி வசூலை கடந்து விட்டதாகவும், நாளைய தினம் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D