அண்ணன் செல்வராகவனைத் தொடர்ந்து தனுஷும் பீஸ்ட் படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் தற்போது நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தினர்.தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு, சென்னையில் தான் நடந்து வருகிறது.

 இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக 3 முக்கிய நடிகர்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்த படி இயக்குநர் செல்வராகவன் இந்த படத்தில் இணைந்துள்ளார். ‘பீஸ்ட்’ படத்தில் வில்லனாக செல்வராகவன் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் நடிகர்கள் விடிவி கணேஷ், யோகி பாபு, லிலிபுட் ஃபரூக்கி, ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

அண்ணன் செல்வராகவனைத் தொடர்ந்து தனுஷும் பீஸ்ட் படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வலம் வரும் தனுஷ், இந்த படத்தில் பாடல் ஒன்றை எழுதி அவரே அதனை பாடவும் போகிறாராம். இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.