Beast update: விஜய், அனிருத்துடன் கைகோர்த்த பூஜா ஹெக்டே...பீஸ்ட் படத்தின் லேட்டஸ்ட் போட்டோ வைரல் ..!
Beast update: விஜய் நடிப்பில் உருவான, பீஸ்ட் திரைப்படத்தின் லேட்டஸ்ட் போட்டோவை படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது, அந்த போட்டோ இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.
விஜய் நடிப்பில் உருவான, பீஸ்ட் திரைப்படத்தின் லேட்டஸ்ட் போட்டோவை படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது, அந்த போட்டோ இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.
நட்சத்திர பட்டாளங்கள்:
கோலமாவு கோகிலா, டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி ஆகிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
படத்தின் ரீலிஸ் அப்டேட்:
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள பீஸ்ட் படம், வரும் ஏப்ரல் மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இதையொட்டி, படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரிலீஸ் தேதிக்கு முன்பு படத்தினை பற்றிய புதிய புதிய அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.
விஜய்யின் பீஸ்ட் அப்டேட்:
இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.அதிலும் குறிப்பாக அரபிக் குத்து பாடல் வெறும் 30 நாட்களில் யூடியூபில் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது.மேலும் தற்போது ரசிகர்கள் அனைவரும் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் அல்லது டீசரை எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பீஸ்ட் படத்தில் இருந்து விஜய்யின் மாஸ்ஸான இரண்டு போட்டோஸ் வெளியாகி ரசிகர்களிடையே செம வைரலானது.
பீஸ்ட் படத்தின் லேட்டஸ்ட் போட்டோ:
மேலும் தற்போது இன்னோரு பீஸ்ட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருகிறது. ஆம் ஜாலியோ ஜிம்கானா பாடல் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் விஜய், அனிருத் பூஜா ஹெக்டே,நெல்சன் ஆகியோர் கலர் சட்டை அணிந்து கைகோர்த்த போஸ் கொடுத்துள்ளனர். தற்போது அந்த புகைப்படம் தான் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.