ஆலங்குளம் டி பி வி மல்டிபிளக்ஸில் உள்ள இரண்டு திரைகளிலும் ஏப்ரல் 13 காலை 4 மணி முதல் ஏப்ரல் 18 அதிகாலை வரை பீஸ்ட் படம் மட்டும் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் பீஸ்ட். நெல்சன் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், சதீஷ், ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு, அபர்ணா தாஸ், ஷான் டாம் சாக்கோ உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளது.
அனிருத் இசையமைத்து உள்ள இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மொழியில் தயாராகி உள்ள இப்படத்தை இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக ஏப்ரல் 13-ந் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது.
முன்னதாக வெளியான அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியாகி ஹிட் அடித்தது. இதையடுத்து சமீபத்தில் ட்ரைலர் வெளியாகியது. அதில் வீரராகவன் என்னும் பெயரில் நடித்துள்ள விஜய் தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொண்ட மக்களை காப்பாற்றும் மாஸ் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

பீஸ்ட் படத்தின் புரமோஷன் பணிகளும் வேகமெடுத்துள்ளன. தமிழில் இதற்காக இயக்குனர் நெல்சனுடன் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் நடிகர் விஜய். அதோடு பிற மொழி புரமோஷன் பணிகளும் நேற்று முதல் தொடங்கி உள்ளது. பீஸ்ட் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் விஜய் தவிர மற்ற முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இதில் நாயகி பூஜா ஹெக்டே வின் நடனமும், ஸ்டைலிஷ் போட்டோ சூட்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இதற்கிடையே டிக்கெட் புக்கிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் சூடு பிடித்துள்ள இந்த பட டிக்கெட் வெளி நாடுகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. அதோடு தியேட்டர் விவரங்களும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 5 நாட்களில் 24 மணி நேரமும் திரையிட முடிவு செய்துள்ளனர். ஆலங்குளம் டி பி வி மல்டிபிளக்ஸில் உள்ள இரண்டு திரைகளிலும் ஏப்ரல் 13 காலை 4 மணி முதல் ஏப்ரல் 18 அதிகாலை வரை திரையிடப்படுகிறது தொடர்ந்து 5 நாட்களுக்கு முழுதும் பீஸ்ட் மட்டும் தானாம்.

